அப்பாவை மிஸ் பண்றியாமா? நான் வேணும்னா அவர்கிட்ட பேசட்டா? வனிதாவுக்கு உதவ காத்திருக்கும் டாப் ஸ்டாரின் தந்தை!
தமிழ் திரை உலகில் பிரபலமாக உள்ள மூத்த நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மனைவி மஞ்சுளாவிற்கு பிறந்த மூன்று பெண் பிள்ளைகள் தான் நடிகைகள் வனிதா விஜயகுமார், ப்ரீத்தா விஜயகுமார் மற்றும் ஸ்ரீதேவி விஜயகுமார்.

1995 ஆம் ஆண்டு நம்பிராஜன் என்பவரின் இயக்கத்தில் வெளியான சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் கதையின் நாயகியாக அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். தனது முதல் திரைப்படத்தில் விஜய் அவர்களுடன் அவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு தமிழில் மாணிக்கம், மலையாளத்தில் ஹிட்லர் பிரதர்ஸ் மற்றும் தெலுங்கு மொழியில் தேவி ஆகிய திரைப்படங்களில் நடித்த அவர், அதன் பிறகு திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து முற்றிலுமாக ஓய்வு பெற்றார். இந்த இடைப்பட்ட காலத்தில் அவருடைய வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்பட்டது என்றே கூறலாம்.
அவரது பெரிய குடும்பத்திற்குள் ஏற்பட்ட சண்டை சச்சரவுகள் காரணமாக அவர் தனது குடும்பத்தை பிரிந்து தனித்து வாழ்ந்து வந்தார். மொத்தம் நான்கு சகோதரிகள் ஒரு சகோதரர் இருந்தும், கடந்த பல ஆண்டுகளாகவே வனிதா விஜயகுமார் தனித்தே வாழ்ந்து வருகிறார்.
குடும்பத்தில் இருந்து பிரிந்த ஆரம்ப காலகட்டத்தில் அவரிடம் நன்றாக பேசி வந்த அவருடைய தாய் இறந்த நடிகை மஞ்சுளா அவர்கள், ஒரு கட்டத்தில் அவரை வெறுக்க துவங்கினார், ஒரு ராட்சசியை எனது வயிற்றில் பெற்றதை எண்ணி வருத்தப்படுகிறேன் என்றெல்லாம் அவர் பொதுவெளியில் பேசியது அனைவரும் அறிந்ததே.
ஆனால் அவருடைய இறுதி நாட்களில் மருத்துவமனையில் அவரோடு உரையாடிய வனிதா, தனது தாய் மஞ்சுளா தன்னை அன்போடு ஏற்றுக் கொண்டதாகவும். மற்றவர்கள் தன்னை ஏமாற்றி விட வாய்ப்புகள் இருக்கிறது, ஆகவே இப்பொழுதே பேசி சொத்தில் உனக்கான பங்கை வாங்கிக்கொள் என்று கூறியதாகவும் சில வருடங்களுக்கு முன்பாக அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.
ஆனால் தனக்கு தன் தாயை விட சொத்து பெரிதல்ல என்று அவர் தனது தாயிடம் கூறியதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இப்பொது நடிகர் டாப் ஸ்டார் பிரசாந்த் நடிப்பில் அவருடைய தந்தை தியாகராஜன் இயக்கி வரும் அந்தகன் படத்தில் வனிதா விஜயகுமார் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இந்த படம் குறித்து ஒரு நேர்காணலில் தியாகராஜன் மற்றும் வனிதா ஆகியோர் பேசினார். அப்போது இயக்குனர் தியாகராஜன், வணிதாவிடம் "மீண்டும் நீ ஏன் உன் குடும்பத்தோடு இணையக்கூடாது? உனது தந்தையை நீ மிஸ் பண்ணுகிறாய் அல்லவா" என்று கேட்டதற்கு, கண்கலங்கியவாரே அவர் ஆம் என்று பதில் அளித்தார்.
ஆனால் நான் குடும்பத்துடன் மீண்டும் இணைய விரும்பவில்லை என்று வனிதா கூற, நான் உன் தந்தையிடம் பேச தயாராக இருக்கிறேன் என்று அவருக்கு ஆறுதல் கூறியுள்ளார் தியாகராஜன். அவர் நல்ல மனிதர் என்றும், வனிதாவும் நல்ல மகள் என்றும் அவர் கூறினார்.