சூப்பர் ஸ்டார் முதல் கேப்டன் வரை.. கோலிவுட்டின் டாப் 5 ஹீரோஸ் - மரண மாஸ் ஹிட் கொடுத்த லெஜென்டரி இயக்குனர்!

மக்கள் திலகம் எம்ஜிஆர் மற்றும் பிரபல தெலுங்கு நடிகர் ராமா ராவ் உள்ளிட்டவர்களின் படங்களில் மேக்கப் கலைஞராக பணியாற்றி வந்தவர் தான் பீதாம்பரம். அந்த மாபெரும் மேக்கப் கலைஞர் பிதாம்பரத்தின் மகன் தான் தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் பி. வாசு அவர்கள் என்பது பலர் அறியாத உண்மை.

Veteran Director P Vasu Top 5 mega hit movies acted by veteran actors of kollywood

துவக்க காலங்களில் பிரபல மூத்த இயக்குனர் ஸ்ரீதர் அவர்களுடைய படங்களில் பணியாற்றி, அதன் பிறகு இயக்குனர் சந்தான பாரதியுடன் (ஏஜென்ட் உப்பிலியப்பன்) இணைந்து படங்களை இயக்கத் தொடங்கினார் பிவாசு. கன்னட மொழியில் சில படங்களை இயக்கிய வாசு, தனித்து நின்று இயக்கி வெளியிட்ட முதல் தமிழ் திரைப்படம், 1988ம் ஆண்டு பிரபு நடிப்பில் வெளியான "என் தங்கச்சி படிச்சவ" என்ற திரைப்படம் தான். 
சுமார் 35 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் தமிழ் திரை உலகில் பயணித்து வருகிறார், இந்நிலையில் அவர் பல முன்னணி நட்சத்திரங்களை கொண்டு பல சூப்பர் ஹிட் திரைப்படங்களையும் கொடுத்துள்ளார் அது குறித்து இந்த பதிவில் காணலாம்.

Chinna thambi

பிரபு.. நடிகர் திலகத்தின் மகனான இளைய திலகம், அவர் அறிமுகமான காலகட்டத்தில் இருந்தே ஆக்சன் மற்றும் காமெடி என்று பல வித்தியாசமான வேடங்களை ஏற்று நடித்து, மக்கள் மத்தியில் மிகப்பெரிய செல்வாக்கினை பெற்று வந்தார். ஆனால் அவருடைய நடிப்பில் சுமார் 365 நாட்களுக்கும் மேல் ஓடி, மெகா ஹிட் ஆன ஒரு திரைப்படம் தான் எதுவென்றால், 1991ம் ஆண்டு பி. வாசு இயக்கத்தில் வெளியான சின்னத்தம்பி என்ற திரைப்படம் தான்.

சத்யராஜ்.. முதலில் தனது சினிமா பயணத்தை வில்லனாக துவங்கி, அதன்பிறகு ஒரே வருடத்தில் பத்துக்கும் மேற்பட்ட படங்களை வெளியிட்டும் அளவிற்கு உயர்ந்த ஒரு சூப்பர் ஹிட் நடிகராக வலம் வந்தவரும், வந்துகொண்டிருப்பவரும் தான் சத்யராஜ். இவருடைய நடிப்பில் கடந்த 1993ம் ஆண்டு பி. வாசு இயக்கத்தில் வெளியான "வால்டர் வெற்றிவேல்" என்ற திரைப்படம் 200 நாட்களைக் கடந்து ஓடி மாபெரும் ஹிட்டான திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

தளபதி விஜய் ரசிகரை தரதரவென இழுத்துபோட்டு தர்ம அடி கொடுத்த ரஜினி ரசிகர்கள் - வைரலாகும் வீடியோ

Sethupathi IPS

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவரும் தமிழ் சினிமா உலகில் கொடி கட்டி பறந்து கொண்டிருந்த நேரத்தில், தமிழ் திரை உலகில் அறிமுகமாகி அதன் பிறகு மிகப்பெரிய ஹீரோவாக உருவெடுத்து, இறுதியில் தேமுதிக என்ற கட்சியையே துவங்கும் அளவுக்கு உயர்ந்தவர் தான் கேப்டன் விஜயகாந்த். இவர் நடிப்பில் 1994ம் ஆண்டு பி. வாசு இயக்கத்தில் வெளியான "சேதுபதி ஐபிஎஸ்" திரைப்படம் இன்றளவும் பலரால் விரும்பப்படும் ஒரு சூப்பர் ஹிட் திரைப்படம்.

சரத்குமார்.. இவரும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து அதன் பிறகு சிறு சிறு கவுரவ வேடங்களில் தோன்றி, இறுதியாக ஹீரோ அந்தஸ்துக்கு உயர்ந்த ஒரு சிறந்த நடிகர். 70 வயதை நெருங்கப் போகிறார் என்ற பொழுதும் தனது உடலை ஒரு கோவில் போல பாவித்து வரும் மிகச் சிறந்த மனிதர் சரத்குமார். இவருடைய நடிப்பில் கடந்த 1995ம் ஆண்டு பி. வாசு இயக்கத்தில் வெளியான கூலி திரைப்படம் மெகா ஹிட் ஆன திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. 1990ம் ஆண்டு வெளியான பணக்காரன் படம் துவங்கி மன்னன், உழைப்பாளி என்று தொடர்ச்சியாக பி. வாசுகி அவர்கள் பல படங்களை சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு இயக்கி உள்ளார். அந்த வகையில் கடந்த 2005ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை வைத்து பி. வாசு இயக்கி வெளியிட்ட சந்திரமுகி திரைப்படம், திரையரங்குகளில் ஒரு வருடத்தையும் கடந்து ஓடியது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சாந்தி திரையரங்கில் சுமார் 890 நாட்கள் ஓடி மாபெரும் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் பெற்ற திரைப்படம் சந்திரமுகி என்பது குறிப்பிடத்தக்கது.

கிழிந்த பாவாடையில் ஆட்டம் போட்ட தமன்னா! புது பாவாடை வாங்கிக்கொண்டு 'ஜெயிலர்' படம் பார்க்க வந்த பிரபலம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios