Actress Devayani Farm House : சினிமா உலகில் 90களின் துவக்கத்தில் கால்பதித்து, 30 ஆண்டுகளை கடந்து இன்றளவும் பல படங்களில் நடித்து வரும் நடிகை தான் தேவயானி.

மகாராஷ்டிராவில் பிறந்த நடிகை தேவயானி, பெங்காலி மொழி திரைப்படங்களின் மூலம் தான் திரை உலகில் அறிமுகமானார். அதன் பிறகு மலையாள திரைப்படங்களில் நடித்து வந்த அவர், கடந்த 1995ம் ஆண்டு தமிழில் வெளியான பிரபல நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான "தொட்டாசிணுங்கி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து பிரசாந்தின் "கல்லூரி வாசல்" திரைப்படம் இவருக்கு ஒரு நல்ல வரவேற்பை பெற்று தந்த நிலையில், கடந்த 1996ம் ஆண்டு தல அஜித் நடிப்பில் வெளியான "காதல் கோட்டை" திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்கள் நெஞ்சில் நீங்காத ஒரு இடத்தினை கமலிக்கு கொடுத்தது. அந்த அளவுக்கு அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

எழுத்தாளர் ஜெயமோகனின் மகன் அஜிதன் திருமண வரவேற்பு! ஏராளமான பிரபலங்கள் நேரில் வந்து வாழ்த்து!

அன்று தொடங்கி இன்று வரை தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வரும் தேவயானி, 85க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர். கடந்த 2001 ஆம் ஆண்டு இயக்குனர் ராஜகுமாரன் அவர்களை காதல் திருமணம் செய்து கொண்ட தேவயானிக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

சென்னையில் ஒரு வீடு வைத்திருக்கும் தேவையானிக்கு, ஈரோட்டின் அருகே உள்ள அந்தியூர் என்ற பகுதியில் பன்னை வீடு ஒன்றும் உள்ளது. இந்த வீட்டை சுற்றி பல்வேறு வகையான பூச்செடிகளை வளர்த்து, விற்பனை செய்து வரும் நடிகை தேவயானி வெயில் காலத்தில் மழை வேண்டுமென்றால் அதற்கும் ஒரு ஏற்பாடு செய்து வைத்திருக்கிறாராம். 

அவர் வீட்டில் வெயில் காலத்தில் ஒரு ஸ்விட்ச் போட்டால் முற்றத்தில் மழை கொட்டுவது போன்ற ஒரு பைப்பிங் அமைப்பை அவர் செய்திருக்கிறார். ஆகையால் வெயில் அதிகமாக அடிக்கும் நேரத்தில் குளிர் காற்றை பெற அதை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். மேலும் இந்த வீடு 5 மிகப்பெரிய பெட்ரூம்கள் கொண்ட வீடு என்றும், தன்னுடைய சொந்தங்கள் விடுமுறை நாட்களில் இங்கு தான் தங்குவார்கள் என்றும் அவரது கணவர் ராஜகுமாரன் கூறியுள்ளார். 

வீட்டை சுற்றி சந்தன மரங்கள், பீட்ரூட், கொய்யா இப்படி வரிசை வரிசையாக பல கனிகளும், பூக்களும் பூத்துக் குலுங்கும் ஒரு பண்ணை வீடாக இது அமைந்திருக்கிறது. தேவயானி இப்பொது ஜெயம் ரவியின் ஜீனி படத்தில் நடித்து வருகின்றார். 

குழந்தைய பாத்துக்க முடியல... என் கணவர் தான் அம்மாவாக இருந்து இதை செய்தார்- மகன் Plato பற்றி மனம்திறந்த ஆனந்தி!