Samuthirakani : பிரபல நடிகர் சமுத்திரக்கனி தற்பொழுது தமிழ் சினிமாவிற்கு இணையாக பல தெலுங்கு திரைப்படங்களிலும் தொடர்ச்சியாக நடித்து வருகின்றார். இந்நிலையில் அவர் நடிக்கவிருக்கும் புது திரைப்படம் குறித்த அறிவிப்பு தற்பொழுது வெளியாகி உள்ளது.

தமிழ் திரையுலகில் கால் பதிக்கும் முன்னரே சின்ன திரையில் பல நாடகங்களில் சிறு சிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து, தனது கலை பயணத்தை துவங்கினார் சமுத்திரக்கனி. அதன்பிறகு பிரபல இயக்குனர் பாலச்சந்தர் அவர்களுடைய உதவி இயக்குனராக மாறி, அவருடைய படங்களில் பணியாற்றத் தொடங்கினார். 

அதன் பிறகு கடந்த 2001 ஆம் ஆண்டு பிரபல நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான பாலச்சந்திரன் நூறாவது திரைப்படமான "பார்த்தாலே பரவசம்" திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. ஆனால் 2008 ஆம் ஆண்டு சசிகுமார் இயக்கத்தில் வெளியான "சுப்பிரமணியபுரம்" என்கின்ற திரைப்படம் நடிகர் சமுத்திரக்கனிக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. 

ராமர் கோவில் திறப்பு நாளில்... பிரதமரை டார்கெட் செய்தாரா நடிகை பார்வதி? இன்ஸ்டா பதிவுக்கு MP கனிமொழி ஆதரவு!

அப்பொழுது இருந்தே தெலுங்கு மொழியிலும், மலையாளத்திலும் பல படங்களில் நடிக்க துவங்கினார் சமுத்திரக்கனி. இந்நிலையில் தற்பொழுது தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் தொடர்ச்சியாக அவர் பல படங்களில் நடித்து வருகின்றார். குறிப்பாக அண்மையில் தெலுங்கில் வெளியாகி மாபெரும் ஹிட்டான "ஹனுமான்" திரைப்படத்திலும், இவ்வாண்டு வெளியாகவுள்ள "Game Changer" மற்றும் இந்தியன் 2 திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்து வருகிறார்.

Scroll to load tweet…

இந்நிலையில் தெலுங்கு நடிகர் தன்ராஜ் கோரனாணி இயக்குனராக களமிறங்கும் ராமம் ராகவம் என்கின்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடிக்க உள்ளார். இது தமிழ் மற்றும் தெலுங்கு என்று இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகவுள்ளது. ஒரு தந்தை மற்றும் மகனுக்கு இடையே உள்ள உறவை கூறும் படமாக இது அமைந்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

பெரியப்பா ஆனார் சிம்பு! டி.ராஜேந்தரின் இரண்டாவது மகன் குறளரசனுக்கு குழந்தை பிறந்தாச்சு.. என்ன குழந்தை தெரியுமா