பழம்பெரும் நடிகர் மாரடைப்பால் மரணம்... மீளா துயரில் திரையுலகம்...!
மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் குடும்பத்துடன் வசித்து வந்த ரவி பட்வர்தனுக்கு கடந்த 5ம் தேதி இரவு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
தூர்தர்ஷனில் வெளியான மகாபாரதம் தொடரில் திருதராஷ்டிரனாக நடித்தவர் ரவி பட்வர்தன். இந்தி மற்றும் மராத்தி மொழியில் 200க்கும் மேற்பட்ட படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து மக்களின் உள்ளம் கவர்ந்தவர். 80களில் பிசியான நடிகராக வலம் வந்து கொண்டிருந்த ரவி பட்வர்தன், தற்போது இந்தி சீரியல்களில் நடித்து வருகிறார்.
மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் குடும்பத்துடன் வசித்து வந்த ரவி பட்வர்தனுக்கு கடந்த 5ம் தேதி இரவு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை குடும்பத்தினர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ரவி பட்வர்தன் மரணமடைந்தார்.
இதையும் படிங்க: சினேகா வீட்டில் நடந்த விசேஷம்... குட்டி பாப்பாவுடன் வெளியான க்யூட் குடும்ப போட்டோஸ்...!
இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் அவருடைய மகன் பதிவிட்டுள்ளார். 'எனது தந்தைக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவருக்கு மூச்சு திணறலும் ஏற்பட்டது. எனவே உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். ஆனால் அரை மணி நேரத்தில் எல்லாம் முடிந்துவிட்டது. அவரை இழந்துவிட்டோம்' என மிகுந்த வருத்தத்துடன் உருக்கமாக தெரிவித்துள்ளார். 84 வயதான ரவி பட்வர்தனின் மறைவிற்கு திரையுலகினரும், நாடக கலைஞர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.