சினேகா வீட்டில் நடந்த விசேஷம்... குட்டி பாப்பாவுடன் வெளியான க்யூட் குடும்ப போட்டோஸ்...!
கொரோனா லாக்டவுன் காரணமாக குட்டி பாப்பா ஆத்யன்டாவுக்கு வீட்டிலேயே மொட்டை அடித்து காது குத்தியுள்ளனர்.
நடிகர் பிரசன்னா, புன்னகை அரசி சினேகாவை கடந்த 2012ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நட்சத்திர காதல் தம்பதிக்கு தற்போது 4 வயதில் விஹான் என்ற மகன் உள்ளார்.
திருமணத்திற்கு பிறகும் அவ்வப்போது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார் சினேகா. கடந்த பொங்கலுக்கு விருந்தாக வெளியான பட்டாசு திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த சினேகா, இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கும் போது அடிமுறை என்ற தற்காப்பு கலையை பயின்ற வீடியோக்கள் வெளியாகி வைரலாகின.
இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த சினேகாவிற்கு கடந்த ஜனவரி மாதம் அழகிய பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு ஆத்யன்டா என பெயர் வைத்துள்ளனர்.
திரையுலகில் மட்டுமின்றி நிஜவாழ்க்கையிலும் வெற்றிகரமான ஜோடியாக வலம் வரும் சினேகா - பிரசன்னா தம்பதியினர் தங்களது வீட்டில் நடக்கும் அனைத்து மகிழ்ச்சியான தருணங்களையும் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர்.
சோசியல் மீடியாவில் மகன், மகளுடன் இருக்கும் புகைப்படங்களை சினேகாவும், பிரசன்னாவும் அவ்வப்போது பகிர்ந்து வருகின்றனர். தற்போது சினேகாவின் வீட்டில் நடந்த ஸ்பெஷல் விசேஷம் குறித்த போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
கொரோனா லாக்டவுன் காரணமாக குட்டி பாப்பா ஆத்யன்டாவுக்கு வீட்டிலேயே மொட்டை அடித்து காது குத்தியுள்ளனர்.
இந்த காதணி விழாவில் பிரசன்னா மற்றும் அவரது மகன் விஹான் இருவரும் ஒரே மாதிரி ஆடை அணிந்து செம ஜோராக போஸ் கொடுத்துள்ள போட்டோக்களை சினேகா வெளியிட்டுள்ளார்.
அதேபோல் அம்மாவும் பொண்ணு பிங்க் காம்பினேஷனில் ஒரே மாதிரியாக உடையணிந்து அழகாக காட்சியளிக்கின்றனர்.
குட்டி பாப்பா ஆத்யன்டாவுக்கு மொட்டை அடித்து காது குத்தி இருக்க அவளை மடியில் வைத்துக் கொண்டவாறு சினேகா வெளியிட்டுள்ள க்யூட் போட்டோ ரசிகர்களை வாழ்த்துக்களை குவித்து வருகிறது.