மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் தர்மேந்திரா, சிகிச்சை முடிந்த பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டு உள்ளார். 

டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் நடிகர் தர்மேந்திரா

நடிகர் தர்மேந்திரா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். அவர் நலமாக இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மேற்கட்ட சிகிச்சைகள் வீட்டிலேயே தொடரும். குடும்பத்தினரின் முடிவைத் தொடர்ந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மூச்சுத்திணறல் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று காலை சுமார் 7:30 மணியளவில் தர்மேந்திரா மருத்துவமனையில் இருந்து வெளியேறினார்.

 இதனிடையே, பாலிவுட் நடிகர் கோவிந்தாவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு அவர் மயக்கமடைந்ததை அடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தற்போது கவலைப்பட ஒன்றுமில்லை என மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 61 வயதான கோவிந்தா, புறநகர் ஜூஹுவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.