'மாநாடு' படத்தில் நடிப்பதற்காகவே தன்னுடைய உடல் எடையை குறைக்க வெளிநாடு சென்று சிகிச்சை எடுத்து கொண்டு இந்தியாவிற்கு வந்தவர் நடிகர் சிம்பு.  தற்போது அந்த படங்களை தவிர்த்து மற்ற படங்களில் நடிப்பதில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

மேலும் விரைவில், இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என எதிர்பார்த்த நிலையில்,  'மாநாடு' திரைப்படம் கைவிடப்பட்டதாக அறிவித்தார் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.  அதே நேரத்தில் இந்த படத்தில் சிம்புவுக்கு பதில் மற்றொரு நடிகர் நடிக்க உள்ளதாகவும். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இன்று காலை அறிக்கை ஒன்றை வெளியிட்டார். 

இதை தொடர்ந்த்து இந்த படம்  குறித்து இயக்குனர் வெங்கட் பிரபு எமோஷ்னல் ட்விட் ஒன்றை போட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மாநாடு' படத்தில் சகோதரர் சிம்புவுடன் பணியாற்ற முடியவில்லை என்பது, உண்மையில் வருத்தமாக உள்ளது. அதே நேரத்தில், தயாரிப்பாளரின்,  பொருளாதார நிலை மற்றும் பிற விஷயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. தயாரிப்பாளர் எடுத்த இந்த முடிவுக்கு நான் உடன்படுகிறேன்' என்று கூறியுள்ளார்.