venkat prabu against kamalshassan in r.k nager trailer
இயக்குனர் வெங்கட் பிரபு மிகவும் ஜாலியான மனிதர். எதையும் சீரியஸாக எடுத்துக்கொள்ள மாட்டார் என திரையுலகில் உள்ள அனைவருக்கும் தெரியும்.
ஆனால் அவர் தற்போது, கமலின் அரசியல் வருகையை எதிர்ப்பது போல... அவர் இயக்கியுள்ள R .K நகர் படத்தின் ட்ரைலரில் ஒரு வசனம் இடம் பெற்றுள்ளது.
தற்போதைய அரசியல் சூழலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது. இதில் நடிகர் சம்பத் 'நடிகன்னா ஓட்டு போடணுமா... எம்.ஜி.ஆரா நீ..? என ஒரு வசனம் பேசியுள்ளார்.
இந்த வசனம் கமலஹாசனை சீண்டுவது போல் உள்ளது என கூறி, நடிகர் கயல் சந்திரன் வெங்கட் பிரபுவிடம் ட்விட்டரில்.. அண்ணா நீங்கள் இது போல் செய்வீர்கள் என்று துளியும் எதிர்பார்க்கவில்லை என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
உடனே வெங்கட் பிரபு கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூற, அதை சரிக்கட்ட இந்த வாழ்த்தா என கயல் சந்திரன் சிறு கோபத்தோடு வெங்கட் பிரபுவிடம் கூறியுள்ளார்.
