வெங்கட் பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன் (Ashok selvan) ஹீரோவாக நடித்துள்ள ‘மன்மதலீலை’ படத்தில் அவருக்கு ஜோடியாக சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன், ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் நடித்துள்ளனர். 

இயக்குனர், இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கியவர் கங்கை அமரன் (Gangai Amaran). இவரது மூத்த மகனான வெங்கட் பிரபு, ஏப்ரல் மாதத்தில் படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இதையடுத்து ஒரு சில படங்களில் நடித்த அவர், கடந்த 2007-ம் ஆண்டு ‘சென்னை 28’ படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார்.

நட்பை மையமாக வைத்து உருவாகி இருந்த இப்படம் அவருக்கு வெற்றியை தேடித் தந்தது. பின்னர் சரோஜா, கோவா என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்த வெங்கட் பிரபு (Venkat Prabhu), கடந்த 2011-ம் ஆண்டு அஜித்தின் மங்காத்தா படத்தை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.

இப்படத்துக்கு பின் கார்த்தியை (Karthi) வைத்து அவர் இயக்கிய பிரியாணி, சூர்யாவின் (suriya) மாஸ் ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தராததால், மீண்டும் சென்னை 28 படக்குழுவுடன் கூட்டணி அமைத்த வெங்கட் பிரபு அதன் இரண்டாம் பாகத்தை எடுத்து, வெற்றி வாகை சூடினார். இதன்பின் 5 ஆண்டுகளாக அவர் இயக்கத்தில் எந்த படமும் ரிலீசாகாமல் இருந்தது.

YouTube video player

அதனைத் தொடர்ந்து சிம்புவை வைத்து மாநாடு (Maanaadu) படத்தை இயக்கினார் வெங்கட் பிரபு, பல்வேறு சர்ச்சைகளையும், தடைகளையும் கடந்து கடந்தாண்டு வெளியான இப்படம், பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்தது. இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் ‘மன்மதலீலை’ (ManmadhaLeelai).

அசோக் செல்வன் (Ashok selvan) ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன், ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் நடித்துள்ளனர். அடல்ட் காமெடி படமாக இது தயாராகி உள்ளது. இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை நடிகர் சிம்பு (Simbu) நேற்று வெளியிட்டார். லிப்கிஸ் நிறைந்த அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிட்டதற்காக சிம்புவுக்கு நன்றி சொல்லி டுவிட் செய்த வெங்கட் பிரபு, அதில் ‘வசனமாடா முக்கியம் படத்த பாருடா’ மொமண்ட் என நக்கலாக பதிவிட்டுள்ளார். 

Scroll to load tweet…