மன்மத லீலை படத்தின் ட்ரெய்லர் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்த சர்ச்சைக்கு தீனி போடும் வகையில் இயக்குனர் பிரபல நடிகரை கைகாட்டியுள்ளார்.
கைகொடுத்த மாநாடு வெற்றி :
சிம்புவின் நீண்ட நாள் காத்திருப்பான மாநாடு படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். பல கட்ட போராட்டங்கள், பேச்சு வார்த்தைகள் என ஒரு தவமாக முடிக்கப்பட்ட படம் தான் இது. படம் குறித்த பெரிய எதிர்பார்ப்புகள் இருந்தன. அதன்படி வெளியான மாநாடு மாஸ் ஹிட் கொடுத்து.
நீண்ட நாள் கழித்த வெற்றி :
அஜித்தின் மங்காத்தாவை தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளியான பிரியாணி, சென்னை 28 இரண்டு இவை போதுமான வரவேற்புகளை பெறவில்லை. இதனால் வெப் சீரிஸ் பக்கம் திரும்பிய வெங்கட் பிரபு குட்டி ஸ்டோரி, லைவ் டெலிகாஸ்ட் உள்ளிட்டவற்றில் பங்கேற்றார். இந்த தோல்விகளுக்கு நல்ல மருந்தாக மாநாடு அமைந்தது.
மன்மத லீலை :
மாநாடு படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் மன்மத லீலை படம் வெளியாகவுள்ளது. அசோக் செல்வன் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ரியா சுமன், சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் அதிக அடல்ட் காமெடி இடம்பெற்றுள்ளதால் சென்சாரில் ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டு உள்ளது. பிரேம்ஜி அமரன் இதற்கு இசையமைத்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு.... Manmadha Leelai : லிப்கிஸ்... அடல்ட் காமெடியுடன் வைரலாகும் மன்மதலீலை டிரைலர்- வெங்கட் பிரபு படமா இது?

சர்ச்சையை கிளப்பிய ட்ரைலர் :
இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ கடந்த மாதம் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், சமீபத்தில் ட்ரைலர் வெளியானது. இதில் லிப்கிஸ், இரட்டை அர்த்த வசனங்கள் என அடல்ட் காமெடி படத்துக்கான அத்தனை அம்சங்களும் நிறைந்துள்ளது. இதை பார்த்த பலரும் கடுமையாக விமர்சங்களை முன் வைத்துள்ளனர்.
வசனங்களால் சிக்கி வெங்கட் :
அதோடு இந்த ட்ரைலரில் 'மாட்டிக் கொள்ளாதவரை எல்லா ஆண்களும் ராமர்களே' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. இது ஆண்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநாடு பட ரிலீஸின் போது வெங்கட் பிரபு எந்த அளவிற்கு பாராட்டப்பட்டாரோ அதே அளவுக்கு தற்போது விமர்சிக்கப்பட்டு வருகிறார்.
மேலும் செய்திகளுக்கு.... Ashok selvan : கொரோனாவோட தான் ஹீரோயின்களுக்கு லிப்கிஸ் கொடுத்தேன் - பகீர் கிளப்பிய அசோக் செல்வன்
படக்குழுவின் விளக்கம் :
விமர்சங்களுக்கு விளக்கமளித்த படக்குழு பலவாறு சமாதானம் சொல்லி வருகின்றனர். ஒருபக்கம் எனக்கும் பெண் பிள்ளைகள் உண்டு நான் அப்படி பட்ட படங்களை இயக்க மாட்டேன் என வெங்கட் பிரபு கூறியுள்ளார். அதேபோல படத்தின் தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் T.சிவா, ''நிச்சயமாக இது ஆபாசமான படமல்ல. குழந்தைகளுடன் குடும்பங்களுடன் பார்க்கத் தகுதியுள்ள படம்'' என்று கூறியுள்ளார். இருந்தும் சர்ச்சை குறைந்தபாடில்லை.
எஸ்.ஜே .சூர்யாவை கை காட்டிய இயக்குனர் :
இந்நிலையில் படத்தின் ட்ரைலரை பதிவிட்டு இது வெங்கல பிரபு லீலைகளில் ஒன்று என எஸ்.ஜே.சூர்யா குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவிற்கு பதிலளித்துள்ள வெங்கட் பிரபு இதற்கு வித்திட்டவர் நீங்கள் தான் என குறிப்பிட்டுள்ளார்.
