vengat prabu announced hero heroine and villein

பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு சென்னை 28 இரண்டாம் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து 'பிளாக் டிக்கெட் கம்பெனி தயாரிக்கும் புதிய படத்தில் பணிபுரியும் டெக்னீஷியன்கள் மற்றும் நடிகர்களை வேட்பாளர் பட்டியல் அறிவிப்பது போல் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்து வருகிறார்.

ஏற்கனவே, முதலகட்ட வேட்பாளர் பட்டியலில் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களாக சரவணன் ராஜா மற்றும் பத்ரி கஸ்தூரி ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். 

இதனையடுத்து 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலில் இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் எஸ்.வெங்கடேஷ், இசையமைப்பாளர் பிரேம்ஜி, படத்தொகுப்பாளர் பிரவீண் கே.எல், கலை இயக்குனர் விதேஷ் மற்றும் காஸ்ட்யூம் டிசைனர் வாசுகி பாஸ்கர் ஆகியோர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டது .

இந்நிலையில் தற்போது மூன்றாவது கட்ட வேட்பாளர் அறிவிப்பில் இந்த படத்தின் ஹீரோ, ஹீரோயின், மற்றும் வில்லன் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஹீரோவாக வைபவ், ஹீரோயினாக சனா, மற்றும் வில்லனாக சம்பத் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். 

நாயகன் வைபவ் ஏற்கனவே வெங்கட்பிரபு இயக்கிய 'மங்காத்தா', 'பிரியாணி' மற்றும் 'சென்னை 600028 II' ஆகிய படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதான் இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் என்றும் இன்று மாலை இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்படும் என்றும் பிளாக் டிக்கெட் கம்பெனி நிறுவனத்தின் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது.