பிக்பாஸ் வீட்டில் எப்போது பிரச்சனை சூடுபிடிக்கும் என கார்த்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு இன்றைய தினம் செம்ம விருந்து. வழக்கம் போல் இந்த பிரச்னையை சுரேஷ் தான் கொளுத்தி போட்டுள்ளார். 

ஒரு வேஷ்டியை வேல்முருகனுக்கு சுரேஷ் கொடுத்ததாக தெரிகிறது. அதை அனைவரிடத்திலும் சொல்லி காட்டியுள்ளார். இதனால் கடுப்பான வேல்முருகன், சுரேஷ் சமையல் செய்து கொண்டிருக்கும் போது வந்து, நான் உங்களிடம் வேஷ்டி கேட்டேனா என தாறுமாறாக கத்துகிறார்.

அணைத்து போட்டியாளர்களும் ஒரு நிமிடம் அதிர்ச்சியாகி பார்க்கிறார்கள். பின்னர், ஒரு வேஷ்டியை கொடுத்து விட்டு தன்னை அசிங்கப்படுத்துவதாக கூறி ஆதங்க படுகிறார் வேல்முருகன். அவரை மற்ற போட்டியாளர்கள் அனைவரும் சமாதானம் செய்து அழைத்து செல்லும் காட்சியும் இடம்பெற்றுள்ளது.

அதே நேரத்தில் தான் அப்படி சொல்லவில்லை என்று மறுக்கிறார் சுரேஷ். அமைதியாக சாப்பிட்டு கொண்டே பத்த வச்சிட்டியே பரட்ட என்கிற வசனத்தையும் பேசுகிறார் சுரேஷ். 

உண்மையில் என்ன நடந்தது, சுரேஷ் மீது தவறு இருக்கிறதா? அவர் என்ன சொன்னார்... எதனால் இந்த பிரச்சனை வெடிக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.