velaikaran single track released

வேலைக்காரன் படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் ஒன்றின் சிங்கிள் டிராக் நேற்று வெளியானது.

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வேலைக்காரன்’.

இதில், முக்கிய வேடத்தில் மலையாளத்தின் பிரபல நடிகர் பஹத் பாசில் நடித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இப்படத்தின் சிங்கிள் டிராக் வெளியாகியுள்ளது.

“கருத்தவன்லாம் கலீஜாம் கிளப்பிவிட்டாங்க! தாஜ்மகாலை கட்டினது கொத்தனாரு இதை ஷாஜகானே ஒத்துப்பாரு” என்ற பாடல் உழைப்பாளர்களின் பெருமையை பேசும் விதமாக அமைத்துள்ளனர்.

இந்தப் பாடலை கவிஞர் விவேகா எழுதியுள்ளார்.

குத்து பாட்டு இசையில் இப்படி ஒரு கருத்துப் பாட்டா! நீங்களும் கேட்டு பாருங்க. உங்களுக்கும் பிடிக்கும்.

வேலைக்காரன் திரைப்படம் வரும் செப்டம்பர் 29ஆம் தேதி வெளியாகும் என்பது கொசுறு தகவல்.