velaikaran film will not only be released in this theater

வேலைக்காரன் படம் சென்னை ரோகினி திரையரங்கில் மட்டும் வெளியாகாது என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் வேலைக்காரன்.

சமூக அக்கறையை மையப்படுத்தியுள்ள இப்படத்திற்கு தணிக்கைக் குழு பாராட்டு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் விதமாக தினமும் ஒவ்வொரு வீடியோவாக வெளியாகி வருகிறது. அந்த வகையில், சின நாள்களுக்கு முன்பு இப்படத்தில் ஹீரோ மற்றும் ஹீரோயின் இணைந்து பாட்டு பாட்டும், மற்றொரு புரோமில் சிவகார்த்திகேயன் மற்றும் ரோபோ சங்கர் இருவரும் இணைந்து நயன்தாராவை ஏமாற்றும் வகையில் வீடியோவும் அமைக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் வெளியாகும் இப்படம் கிட்டத்தட்ட 2 மணி நேரம் 39 நிமிடம் ஓடக்கூடியது. வரும் 22-ஆம் தேதி வெளியாகும் இப்படத்திற்கு காலை 5 மணிக்கு முதல் நாள் முதல் ஷோ வெளியாகவுள்ளது.

ஆனால், சென்னை, கோயம்பேட்டில் உள்ள ரோகினி சில்வர் ஸ்கிரீனில் வேலைக்காரன் படம் வெளியாகாது.

ஏனென்றால், விநியோகஸ்தர்கள் சரியான ஒத்துழைப்பு தராததால், வேலைக்காரன் ரோகினி திரையரங்கில் வெளியாகாது என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.