துணிந்து இறங்கும் விஷால் ... பொங்கல் ரேஷில் வலிமை படத்துடன் வீரமே வாகை சூடவா படமும் மோத உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்ட்ரி மூலம் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இப்படத்தை டிசம்பர் மாத இறுதியில் வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கபட்டிருந்தது. ஆனால் அந்த சமயத்தில் பெரிய பட்ஜெட் படங்களான புஷ்பா, ஸ்பைடர்மேன் உள்ளிட்டவை ரிலீசாக உள்ளதால் பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டிருந்தார். 

ஏற்கனவே தீபாவளிக்கு அண்ணாத்த படத்துக்கு போட்டியாக எனிமி படத்தை வெளியிட்ட விஷால், பொங்கலுக்கு அஜித்தின் வலிமை படத்துக்கு போட்டியாக ‘வீரமே வாகை சூடும்’ படத்தை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடிகர் விஷால் ‘வீரமே வாகை சூடும்’ படத்தை ஜனவரி 26-ந் தேதி குடியரசு தினத்தன்று வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வலிமைக்கு பெரும் போட்டியாக இருக்கும் என எண்ணப்பட்ட ஆர்.ஆர்.ஆர்- ன் கொரோனா பரவல் காரணாமாக ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் 50 சதவீத தியேட்டர்களை வலிமை அக்கிரமித்தாலும் மீதமுள்ள திரையரங்குகள் விஷால் படத்திற்கு கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் பொங்கல் ரிலீசாக வீரமே வாகை சூடும் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு உத்தேசித்து வருவதாக சொல்லப்படுகிறது.