Asianet News TamilAsianet News Tamil

Jai Bhim: 'ஜெய் பீம்' மற்றும் 'திரௌபதி'.. அடங்கி போகச்சொன்ன திருமா! தூண்டிவிடும் அன்புமணி! அதிர வைத்த ட்வீட்!!

விசிக தலைவர் திருமாவளவன், தனக்கு யாரென்றே தெரியாத விஜய் என்கிற இளைஞர் ஒருவர் பதிவிட்ட ட்விட்டை  ஷேர் செய்து தன்னுடைய கருத்தை கூறி, அன்புமணிக்கு பாடம் எடுத்துள்ள பதிவு தற்போது அரசியல் வட்டாரத்தை அதிர வைத்துள்ளது.

 

Vck President thirumavalavan criticism for pmk anbumani ramdoss
Author
Chennai, First Published Nov 13, 2021, 3:52 PM IST

விசிக தலைவர் திருமாவளவன், தனக்கு யாரென்றே தெரியாத விஜய் என்கிற இளைஞர் ஒருவர் பதிவிட்ட ட்விட்டை  ஷேர் செய்து தன்னுடைய கருத்தை கூறி, அன்புமணிக்கு பாடம் எடுத்துள்ள பதிவு தற்போது அரசியல் வட்டாரத்தை அதிர வைத்துள்ளது.

வண்ணாரப்பேட்டை படத்தை தொடர்ந்து, இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகி இருந்த திரைப்படம் 'திரௌபதி'. நாடக காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த இந்த படத்தில், தல அஜித்தின் மனைவி ஷாலினியின்... சகோதரரான ரிசார்ட் ஹீரோவாக நடித்திருந்தார்.  இந்த திரைப்படம் கடந்த ஆண்டு
வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது மட்டுமின்றி, குறிப்பிட்ட சாதியினரை பற்றி எடுக்கப்பட்டதாக பல்வேறு சர்ச்சைகளும் கிளம்பியது.

Vck President thirumavalavan criticism for pmk anbumani ramdoss

குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உயர் ஜாதி பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு அவர்களது வாழ்க்கையை சீரழிப்பது குறித்து இந்த படம் பேசியது. சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத காட்சிகளும், கதாபாத்திரங்களும் இப்படத்தில் இடம்பெற்றிருந்தது. அந்த வகையில் திருமாவளவனை சித்தரிப்பது போன்றும் ஒரு கதாபாத்திரம் இந்த படத்தில் இருந்தது.

இது குறித்து திருமாவளவனிடம் கேட்டபோது அதற்கு பதிலளித்த அவர், "அந்த படத்தை நான் பார்க்கவில்லை, படம் பார்க்க தனக்கு நேரமும் இல்லை, எனவே அதைப் பற்றி தான் சொல்வதற்கு ஒன்றுமில்லை என்பதுபோல் தெரிவித்திருந்தார். எனவே இந்த பிரச்சனை பெரிய அளவில் பேசப்படாமல் கடந்து போய் விட்டது.

Vck President thirumavalavan criticism for pmk anbumani ramdoss

ஆனால் தற்போது சூர்யா நடித்து தயாரித்துள்ள 'ஜெய்பீம்' திரைப்படத்திலும், குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரை மோசமானவர்கள் போல் சித்தரிப்பதாக சில காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக, இந்த படம் வெளியானதில் இருந்து, ஒரு தரப்பினர் தொடர்ந்து தங்களது எதிர்ப்பை எதிரிவித்து வருகிறார்கள். அப்படி சர்ச்சையாக பேசப்பட்ட காலண்டர் காட்சி ஒன்றையும் படக்குழு உடனடியாக மாற்றியது.  பின்னர் இந்த படம் குறித்தும் சூர்யா தன்னுடைய தரப்பிலிருந்து விரிவான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு அன்புமணிக்கு பதில் கொடுத்திருந்தார். அதே போல் அன்புமணி ராமதாஸ் தரப்பில் இருந்தும் அறிக்கை மூலம் விளக்கம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Vck President thirumavalavan criticism for pmk anbumani ramdoss

இந்த நிலையில் தான் தற்போது விஜய் என்கிற நபர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவை வெளியிட்டு திருமாவளவன் கூறியுள்ளது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதில் கூறியுள்ளதாவது "திரௌபதி படத்தில் ஒரு கேரக்டர் அச்சு அசலாக திருமாவளவன் மாதிரிதான் காட்டி எடுத்து வைத்திருப்பான் மோகன். அதுபற்றி திருமா கிட்ட கேட்டப்போ அந்த படத்தை நான் பார்க்கல, பார்க்க எனக்கு நேரமும் இல்லை அது பற்றி கருத்து சொல்ல ஒன்னும் இல்லன்னு சொல்லி முடித்துவிட்டார். விசிக காரவங்க அதை பெரிசு பண்ணி இருந்தாங்கனா பெரிய சட்டம் ஒழுங்கு, சாதி கலவரம் நடந்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும். திருமாவளவன் தான் கட்சியினரை அதை எளிதாக கடந்து போக சொல்லிவிட்டார். அதுதான் தலைமை பண்பு. அன்புமணி அப்பாவி வன்னிய இளைஞர்களை அரசியல் சுயலாபத்திற்காக தூண்டி விடுகிறார். என்பது போல் பதிவிட்டுள்ளார்.

Vck President thirumavalavan criticism for pmk anbumani ramdoss

இந்த இளைஞரின் பதிவை எடுத்துப் போட்டு தன்னுடைய கருத்து தெரிவித்துள்ள திருமாவளவன், கீழேயுள்ள ட்வீட்டை செய்துள்ள தம்பி @vijay_writes யாரென்று தெரியவில்லை. எனினும் இவருடைய நேர்மைத் திறத்துக்கு எனது மனமார்ந்த நன்றி. இவரைப் போன்ற சனநாயக சக்திகள் உண்மைகளைச் சொல்ல வேண்டிய நேரத்தில் உரத்துச் சொல்லுவதுதான் சனநாயகத்தின் மீதான  நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துகிறதுதெரிவித்துள்ளார் இந்த பதிவு தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios