Asianet News TamilAsianet News Tamil

வசந்த பாலன் இயக்கி, தயாரிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது..!

'ஆல்பம்' படத்தில் இயக்குனராக அறிமுகமாகி, பின்னர் 'காவியத்தலைவன்', 'அங்காடித்தெரு', என வரிசையாக முத்தான படங்களை இயக்கி ரசிகர்களின் கண்ணுக்கு விருந்து படைத்து வரும் வசந்த பாலன் இயக்கி , தயாரிக்க உள்ள படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் துவங்க உள்ளது.
 

vasanthabalan movie shooting start today
Author
Chennai, First Published Feb 15, 2021, 5:02 PM IST

'ஆல்பம்' படத்தில் இயக்குனராக அறிமுகமாகி, பின்னர் 'காவியத்தலைவன்', 'அங்காடித்தெரு', என வரிசையாக முத்தான படங்களை இயக்கி ரசிகர்களின் கண்ணுக்கு விருந்து படைத்து வரும் வசந்த பாலன் இயக்கி , தயாரிக்க உள்ள படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் துவங்க உள்ளது.

இந்த படத்தில் தமிழில் 'கைதி' படத்தில் வில்லனாக அறிமுகமாகி, தற்போது ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார் அர்ஜுன் தாஸ்.  ஏற்கனவே இவர் அட்லி தயாரிப்பில் வெளியான 'அந்தகாரம்' என்கிற படத்தில் ஹீரோவுக்கு நிகரான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து, சமீபத்தில் வெளியான விஜய்யின் 'மாஸ்டர்' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

vasanthabalan movie shooting start today

தற்போது அர்ஜுன் தாஸ், வசந்தபாலன் தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் இயக்க உள்ள படத்தில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக, நடிகை துஷாரா நடிக்கிறார். இவர் ஏற்கனவே 'போதை ஏறி புத்தி மாறி' மற்றும் பா.ரஞ்சித் இயக்கியுள்ள 'சார்பட்டா' படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

vasanthabalan movie shooting start today

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ள இந்த படத்தை, இயக்குனரும் தயாரிப்பாளருமான வசந்த பாலன், தனது  பள்ளி நண்பர்களுடன் அர்பன் ஸ்டூடியோ என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி   இயக்கி - தயாரித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பமானது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios