Asianet News TamilAsianet News Tamil

விஜய்யின் 'வாரிசு' மற்றும் அஜித்தின் 'துணிவு' படத்துடன் கனெக்ட்டான 'வர்ணாஸ்ரமம்' ! படக்குழு போட்ட மாஸ் பிளான்!

விஜய்யின் 'வாரிசு',மற்றும் அஜித்தின் 'துணிவு' திரைப்படங்கள் வெளியாகும்  தியேட்டர்களில், சிந்தியா லெளர்டே கதையின் நாயகியாக நடித்து தயாரித்துள்ள 'வர்ணாஸ்ரமம்' படத்தின் டிரெய்லர் வெளியாக உள்ளது.
 

Varnasramam movie trailer released for varisu and thunivu release theatres
Author
First Published Jan 6, 2023, 9:39 PM IST

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாகும் விஜய்யின் 'வாரிசு',மற்றும் அஜித்தின் 'துணிவு' திரைப்படங்கள் வெளியாகும்  தியேட்டர்களில் சுகுமார் அழகர்சாமி எழுதி இயக்கி, சிந்தியா லெளர்டே கதையின் நாயகியாக நடித்து தயாரித்துள்ள 'வர்ணாஸ்ரமம்' படத்தின் டிரெய்லர் வெளியாக உள்ளது.

ஆணவக்கொலை பற்றிய நெஞ்சை பதறவைக்கும் படமாக உருவாகி உள்ள இதில் ராமகிருஷ்ணன்," பிக்பாஸ்" புகழ் அமீர், வைஷ்ணவி ராஜ், ஸ்ரீராம் கார்த்திக், விஷ்ணு பாலா, குகாசினி, நிமிமானுவேல், வாசுதேவன்,  வந்தனா, உமா மகேஷ்வரி, ஏ.பி.ரத்னவேல், விசை மற்றும் பலர் நடித்துள்ளனர்.

Varnasramam movie trailer released for varisu and thunivu release theatres

சோனியா அகர்வாலுக்கு அடித்த ஜாக்பாட்! வித்தியாசமான கதைக்களத்தில் மிரவைக்க வரும் படம் பூஜையுடன் துவங்கியது!

தீபன் சக்கரவர்த்தி இசையையும், உமாதேவி பாடல்களையும், கா.சரத்குமார் எடிட்டிங்கையும், பிரவீணா.எஸ். ஒளிப்பதிவையும், ராஜேஷ்கண்ணன் சண்டை பயிற்சியையும், புத்தமித்திரன் கலையையும், ஏ.பி.ரத்னவேல் நிர்வாக தயாரிப்பையும், எம்.பாலமுருகன் தயாரிப்பு மேற்பார்வையையும் கவனித்துள்ளனர்.

Varnasramam movie trailer released for varisu and thunivu release theatres

தமிழ் படங்களில் பாடுவதற்காக சென்னை வந்த அமெரிக்க பாடகியான சிந்தியா லௌர்டே அதற்கான வாய்ப்பை உருவாக்குவதற்காக படத்தயாரிப்பில் ஈடுபட்டார். அதற்காக சிந்தியா புரொடக்சன் ஹவுஸ் என்ற பட நிறுவனத்தை துவக்கினார். சுகுமார் அழகர்சாமியின் கதையை தேர்வு செய்து அவரையே படத்தை இயக்கச் சொன்னார். கதையின் நாயகியாக நடித்து, தனக்கு பிடித்தமான பாடலையும் பாடி , படத்தையும் தயாரித்துள்ளார். பல ஆயிரம் மைல்களை கடந்துவந்து தனது லட்சியமான பாடும் ஆசையை நிறைவேற்றுவதற்காக " வர்ணாஸ்ரமம்" படத்தை தயாரித்துள்ளார் சிந்தியா லௌர்டே.

Samantha Photos: உடல் மெலிந்து போன சமந்தா... சோகம் தள்ளாடும் முகத்துடன் வெளியான லேட்டஸ்ட் போட்டோ!

Follow Us:
Download App:
  • android
  • ios