அடக்கொடுமையே... ‘வாரிசு’ படத்திற்காக விஜய் பாடிய பாடல் வீடியோவுடன் லீக் ஆனது - படக்குழு அதிர்ச்சி
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு படத்தில் இடம்பெறும் ரஞ்சிதமே என்கிற பாடலின் ஷூட்டிங் ஸ்பாட் காட்சிகள் லீக் ஆகி உள்ளன.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு படத்தை வம்சி இயக்கி வருகிறார். தில் ராஜு தயாரிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். வாரிசு படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. விஜய், ராஷ்மிகா நடிக்கும் பாடல்காட்சி தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. இது முடிந்த உடன் வாரிசு பட ஷூட்டிங் முழுமையாக நிறைவடையும் என கூறப்படுகிறது.
வாரிசு படத்தை வருகிற ஜனவரி மாதம் பொங்கல் விடுமுறையில் ரிலீஸ் செய்ய உள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. இதற்கான வேலைகளும் ஒருபுறம் படு பிசியாக நடந்து வருகிறது. மறுபுறம் இப்படத்தின் அப்டேட்டும் தீபாவளி முதல் வெளியாகும் என கூறப்படுகிறது. அதன்படி தீபாவளிக்கு இப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் என கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... Varisu Movie: தீபாவளிக்கு விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து..! கசிந்தது ஸ்வீட் தகவல்..!
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்னும் ஒருசில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது வாரிசு படத்தின் பாடல் காட்சி படமாக்கப்பட்டபோது எடுத்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் லீக் ஆகி வைரல் ஆகி வருகிறது. விஜய்யும், ராஷ்மிகாவும் ஜோடியாக ஆடும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்று உள்ளன.
ரஞ்சிதமே... ரஞ்சிதமே என தொடங்கும் அந்த பாடலை நடிகர் விஜய் தான் பாடி உள்ளாராம். இப்பாடலைத் தான் தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது திருட்டுத்தனமாக அதன் வீடியோ காட்சிகள் இணையத்தில் லீக் ஆனதால் படக்குழு கடும் அப்செட்டில் உள்ளதாம். லீக்கான வீடியோவை நீக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதையும் படியுங்கள்... மாமனார் வீட்டில் தளபதிக்கு காத்திருக்கும் பஞ்சாயத்து..? பழைய பிரச்சனை தீர்வுக்கு வருமா..