varalaksmi sarathkumar sad tweet
நடிகை வரலட்சுமி சரத்குமார் வீட்டில் அவர் செல்லமாக வளர்த்து வந்த, டினோ என்கிற நாய் இறந்து விட்டதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறி துக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
வரலட்சுமி:
நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக, 'போடா போடி' படத்தில் அறிமுகமானவர் வரலட்சுமி. ஆரம்பத்தில் படவாய்புகள் கிடைக்க வில்லை என்றாலும் தற்போது பல படங்களில் முக்கியமான கதாப்பாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
வெற்றிப்படங்கள்:
கடந்த ஆண்டில் மட்டும் இவர் நடித்து வெளியான 'விக்ரம் வேதா', 'சத்தியா' உள்ளிட்ட படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. தற்போது விஷாலுடன் சண்டக்கோழி, மிஸ்டர் சந்திர மௌலி, சக்தி உள்ளிட்டப் படங்களில் நடித்து வருகிறார்.
அமைப்பு:
மேலும் திரைத்துறையில் நடிகைகளுக்கு ஏற்படும் அவலங்களை தட்டிக் கேட்கும் வகையில், சக்தி என்கிற அமைப்பை நிர்வகித்து வருகிறார்.
சோகத்துடன் ட்விட்:

இந்நிலையில் இவர் செல்லமாக வளர்த்து வந்த டினோ என்ற நாய் இறந்துவிட்டது. இது குறித்து அவர் ட்விட்டரில் தன் சோகத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் டினோ நீ இந்த வீட்டில் ஒரு மனிதனாக இருந்தாய். எங்கள் மீது அளவில்லாமல் அன்பு செலுத்தியதற்கு நன்றி. நீ நல்ல இடத்தில் இருப்பாய் என நம்புகிறேன். உனக்கு நல்ல உணவு கிடைக்கும். நான் உன்னை இழந்துவிட்டேன். ஐ லவ் யூ டினோ பேபி என சோகத்துடன் கூறி புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
