நடிகை பாவனா பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார் என செய்தி வந்த பின் , அதே போல் நானும் ஒரு சேனல் அதிகாரியால் பாதிக்க பட்டேன் என சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், பிரபல நடிகரின் மகளுமான வரலட்சுமி சரத்குமார் கூறி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகினார்.

மேலும் அவர் தன்னிடம் வேறு விஷயங்களுக்கு எப்போது சந்திக்கலாம் என கொஞ்சம் கூட கூச்சப்படாமல் கேட்டதாக தெரிவித்தார்.

அதற்கு அவருடைய ரசிகர்கள் பலர் யார் அந்த நபர் பெயரை சொல்லுங்கள் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்... அது எந்த சேனல் என வரலட்சுமியை துருவி துருவி பல கேள்விகள் கேட்டனர்.

அதற்கு தற்போது பதில் கூறியுள்ள வரலட்சுமி, நான் ஏன் அவரை பற்றி சேனலில் அல்லது போலீஸிடம் ஏன் புகார் கொடுக்கவில்லை? என அடுக்கடுக்கான கேள்விகள் பலரும் கேட்டு வருகின்றனர். 

ஒரு நபரின் தவறு அதற்காக அந்த சேனலின் பெயரை ஏன் நான் கெடுக்கவேண்டும்" என தெரிவித்துள்ளார்.

மேலும் பெண்களுக்கு நடக்கும் அநீதிகளுக்கு எதிராக தான் இந்த போராட்டம்.. ஒருவருக்கு எதிராக மட்டுமல்ல. நாட்டில் உள்ள எல்லா குற்றவாளிகளுக்கு எதிராக தான் நான் போராடுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.