Asianet News Tamil

வனிதா இந்த முடிவுக்கு என்ன காரணம்? பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் இருந்து திடீர் என வெளியேறியதால் அதிர்ச்சி!

எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் அதனை அசால்டாக தட்டி தூள் கிளப்பும் வனிதா விஜயகுமார் திடீர் என இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேற என்ன காரணம் என நெட்டிசன்கள் மற்றும் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
 

vanitha vijayakumar walk out the biggboss jodi show
Author
Chennai, First Published Jul 2, 2021, 7:12 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் அதனை அசால்டாக தட்டி தூள் கிளப்பும் வனிதா விஜயகுமார் திடீர் என இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேற என்ன காரணம் என நெட்டிசன்கள் மற்றும் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்களை வைத்து நடத்தப்பட்டு வரும் 'பிக்பாஸ் ஜோடிகள்' நிகழ்ச்சியில், ஒவ்வொரு வாரமும் மற்றவர்களை விட மிகவும் வித்தியாசமான கெட்அப்பில் வந்து தன்னுடைய நடன திறமையை வெளிப்படுத்தி வந்தவர் வனிதா விஜயகுமார். குறிப்பாக இவர் சமீபத்தில் எடுத்த காளி அவதாரத்துக்குப் பாராட்டுக்கள் குவிந்தது.

மேலும் செய்திகள்: அடுத்த வாரம் திருமணம்... இது உண்மையா? காஜல் பசுபதி போட்ட பதிவால் குழம்பி போன ரசிகர்கள்.!
 

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் விஜய் டிவியின் ஒரு அங்கமாகவே இருந்து வந்த வனிதா, பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியை விட்டு நான் வெளியேறுகிறேன் என்றும், சில துன்புறுத்தல்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்பது போல் தெரிவித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்: 17 வருட கனவு நிறைவேறியது... ஆஞ்சநேயர் கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்த ஆக்‌ஷன் கிங் அர்ஜுன்!
 

இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு வனிதா கூறியுள்ளதாவது, பிக்பாஸ் 3 நிகழ்ச்சிக்கு பின் விஜய் டிவி எனது குடும்பமாகிவிட்டது. குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு, மற்றும் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன். எனக்கு அங்கு நல்ல மரியாதை உண்டு. அது எப்போதுமே நீடிக்கும் என நினைக்கின்றேன். ஆனால் பணிசெய்யும் இடத்தில் தொழில்முறை அல்லாது, நெறிமுறையற்ற நடத்தையை ஏற்கவே முடியாது. ஒரு மோசமான நபரால் நான் துன்புறுத்தப்பட்டதோடு அவமானப்படுத்தப்பட்டேன், இதற்கு அவரது திமிர் காரணமாக இருக்கலாம், அல்லது அவரால் எனது தொழில் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் இருக்கலாம்.

மேலும் செய்திகள்: ரம்யா பாண்டியன் உதட்டை கடித்து... மூக்கை கடித்து முத்தம் கொடுத்து கொஞ்சல்ஸ்! வைரல் வீடியோ..!
 

வேலை செய்யும் இடத்தில் பெண்களை ஆண்கள் மட்டும் மோசமாக நடத்துவதில்லை, பெண்களும் தான் மோசமாக நடத்துகின்றனர். பொறாமை காரணமாக நமக்கு வரும் வாய்ப்புகளை கெடுக்க நினைக்கிறார்கள். இருப்பினும் நான் எனது திரைப்பட வேலைகளில் பிசியாக இருப்பதால் தொடர்ந்து நீங்கள் என்னைத் திரைப்படங்களில் பார்க்கலாம்.

மேலும் செய்திகள்: கொரோனா நேரத்திலும் குதூகலாம்... குட்டை டவுசருடன் வலம் வரும் ராஷ்மிகா மந்தனா... வைரல் கிளிக்ஸ்!
 

என்னை விட எல்லா விதத்திலும் மூத்த நபர் அவர், கடுமையாக உழைத்து முன்னேறியவர். முன்னேறக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் இளைஞர்களைக் தாழ்மையோடு பார்ப்பதும், அவர்களது ஊக்கத்தைக் கெடுத்து அவமானப்படுத்துவதையும் பார்க்க வேதனையாக இருக்கிறது. குறிப்பாக நீண்ட நாட்களின் போராட்டத்துக்குப் பின், குடும்பம், கணவரின் ஆதரவு இல்லாமல் சாதிக்கும், 3 குழந்தைகளின் தாயை இப்படி நடத்துகிறார். பெண்கள், சக பெண்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டும். மாறாக அவர்களின் வாழ்க்கையை கெடுக்க கூடாது. பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலிருந்து விடை பெறுவது வருத்தம் தான். மற்ற அத்தனை போட்டியாளர்களுக்கும் வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.

என்னால் இந்த நிகழ்ச்சியில் இருந்து நீங்களும் வெளியேறும் நிலை உருவாகிவிட்டது என சுரேஷ் சக்ரவர்த்தியும், வனிதா விடைபெற்றதால் கலந்து கொள்ளமுடியவில்லை என்பதை கூறி மன்னிப்பு கேட்டுள்ளார். வனிதா குறிப்பிட்ட அந்த நபர் யாராக இருக்கும்... என்பதே தற்போது பலரது கேள்வியாக இருக்கிறது.


 

 

Follow Us:
Download App:
  • android
  • ios