வனிதா விஜயகுமார் இயக்கி நடித்துள்ள திரைப்படம் தான் ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’. தற்போது இந்த படத்தின் டிரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
வனிதா நடித்துள்ள ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’
பல ஆண்டுகளாக திரைத்துறையில் இருந்து விலகி இருந்த வனிதாவுக்கு பிக்பாஸ், குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளில் பங்கெடுத்த பின்னர் பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. சில படங்களில் நடித்துள்ள அவர், தற்போது ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ என்கிற படத்தை இயக்கி, நடித்துள்ளார்.
தயாரிப்பாளரான வனிதா மகள் ஜோவிகா
இந்த படத்தில் வனிதாவுக்கு ஜோடியாக அவரது முன்னாள் காதலரும், நடன இயக்குனருமான ராபர்ட் மாஸ்டர் நடித்துள்ளார். படத்தை வனிதாவின் மூத்த மகள் ஜோவிகா தயாரித்துள்ளார்.
‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ டிரெய்லர்
இந்த படத்தில் வனிதா மற்றும் ராபர்ட் மாஸ்டருடன் இணைந்து ஸ்ரீமன், ஷகிலா, ஆர்த்தி மற்றும் செஃப் தாமு ஆகியோர் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற ஜூன் மாதம் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.