நடிகை வனிதா விஜயகுமார் இயக்கி, நடித்து வரும் திரைப்படம் தான் ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’. இந்த படத்தின் ரிலீஸ் தேதியை ‘டெலிவரி தேதி’ என அறிவித்து வனிதா விஜயகுமார் வெளியிட்டுள்ள போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மீண்டும் திரைத்துறைக்கு திரும்பிய வனிதா
பழம்பெரும் நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா தம்பதிகளின் மூத்த மகள்தான் வனிதா விஜயகுமார். தந்தை விஜயகுமார் மற்றும் குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தனது மகள்களுடன் தனியாக வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் வனிதாவிற்கு பிக் பாஸ், குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னர் தொடர்ச்சியாக அவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து வருகிறது.
‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ திரைப்படம்
இந்த நிலையில் அவர் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் உடன் இணைந்து ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ என்கிற படத்தை இயக்கி, நடித்துள்ளார். இந்த படத்தை வனிதாவின் மகள் ஜோவிகா தயாரித்துள்ளார். படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.
டிரெய்லர் வெளியாகும் தேதி அறிவிப்பு
படம் குறித்த அப்டேட்டுகளை அவ்வபோது வனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். படத்தின் ஆடியோ லாஞ்ச் மற்றும் டிரெய்லர் வருகிற மே 25-ம் தேதி வெளியாகும் என்றும், படத்தின் டெலிவரி ஜூன் மாதம் என்றும் வனிதா போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளார்.
‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ படத்தில் நடித்துள்ள நடிகர்கள்
அவர் பகிர்ந்துள்ள போஸ்டரில், அவர் கர்ப்பமாக இருப்பது போலவும், அவரது வயிற்றை ராபர்ட் முத்தமிடுவது போன்ற காட்சியும் இடம் பெற்றுள்ளது. இந்த படத்தில் வனிதா மற்றும் ராபர்ட்டுடன் இணைந்து ஸ்ரீமன், ஷகிலா, செஃப் தாமு, பவர் ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
வனிதாவுக்கு வாழ்த்துக்கள் கூறும் ரசிகர்கள்
இந்தப் படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு வனிதா மீண்டும் திரைத்துறை பக்கம் திரும்பி இருக்கிறார். அவருக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.