தனது முதல் கணவர் ஆகாஷிடம் இருந்து விவாகரத்து பெற்ற அவர், அதே ஆண்டில் ஆனந்த் என்ற தொழிலதிபரை மணந்தார்.

விஜயகுமார் - மஞ்சுளா நட்சத்திர தம்பதியின் மூத்த மகள் தான் வனிதா விஜயகுமார். தளபதி விஜய்க்கு ஜோடியாக ‘சந்திரலேகா’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான வனிதா விஜயகுமார் சில படங்களில் நடித்துள்ளார். பின்னர் திரைத்துறைக்கு குட்பை சொல்லிவிட்டு திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். பிரபல நடிகர் ஆகாஷை திருமணம் செய்த வனிதா, திருமணத்திற்குப் பிறகு, பொறுப்பான மனைவியாகவும், குழந்தைகளுக்கு அன்பான தாயாகவும் இருந்தார். எனினும் தனது வாழ்க்கையில் பல போராட்டங்களை எதிர்கொண்டார். தனது முதல் கணவர் ஆகாஷிடம் இருந்து விவாகரத்து பெற்ற அவர், அதே ஆண்டில் ஆனந்த் என்ற தொழிலதிபரை மணந்தார்.

முதல் கணவருக்கு விஜய ஹரி, ஜோவிகா என இரு பிள்ளைகளும், 2வது கணவருக்கு ஜெயனிதா என்ற மகளும் என மொத்தம் 3 பிள்ளைகள் உள்ளனர். இரண்டாவது கணவரிடமிருந்து விவாகரத்து பெற்ற வனிதா விஜயகுமார், தனது மூன்று குழந்தைகளை தனியாக வளர்க்க விரும்பிய நிலையில், அவரது மகன் விஜய ஹரியை தந்தையுடன் தங்க நீதிமன்றம் அனுமதித்தது. அதனால் வனிதாவை விட்டு என்றென்றும் விலகி தந்தையுடன் வளர்ந்து வருகிறார் விஜய ஹரி.

வனிதா விஜயகுமார் முதல் VJ சித்ரா வரை: மோசமான உறவில் இருந்த டிவி பிரபலங்கள்..

அதேபோல் வனிதாவின் முதல் கணவருக்கு பிறந்த மகள் ஜோவிகா தற்போது வனிதாவுடன் வசித்து வருகிறார். இரண்டாவது கணவருக்கு பிறந்த மகள் ஜெயனிதா தனது தந்தையுடன் வசிக்கிறார், ஆனால் அவர் அவ்வப்போது வனிதாவைப் பார்க்க வருகிறார். பின்னர் கடந்த 2020-ம் ஆண்டு பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவருடன் ஏற்பட்ட மோதலால் தற்போது அவரை விட்டு பிரிந்துவிட்டார். இதுதவிர சில காதல், சர்ச்சைகளில் சிக்கிய வனிதா, அதிலிருந்து மீண்டு... தற்போது திரையுலகில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.

சமீபத்தில் ஒரு பேட்டியில் தனது தங்கைகள் குறித்தும், தான் காதல் திருமணத்திற்கு எதிரானவள் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். இதுபற்றி பேசிய வனிதா “ எங்கள் அம்மா மஞ்சுளா என்னையும், எனது தங்கை பிரீத்தாவை அடித்து வளர்த்தார். ஆனால் அவர் மூன்றாவது சகோதரியான ஸ்ரீதேவியை மட்டும் ஒருபோதும் அடிக்க மாட்டார். அதற்கு காரணம் ஸ்ரீதேவிக்கு சிறுவயதில் இருந்தே கோபம் அதிகம். அறைக்குள் சென்று கதவை சாத்திக்கொள்வாள். கண்ணில் பட்டதை எல்லாம் உடைப்பாள். சிறுவயதில் இருந்தே, ஸ்ரீதேவி சைக்கோ ஸ்டன் மூலம் அனைவரையும் பயமுறுத்தி, தனது டிராமா மூலம் அனைவரையும் ஏமாற்றுவார். அதனால் ஸ்ரீதேவியை மட்டும் யாரும் அடிக்க மாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து பேசிய வனிதா “ நான் காதலர் பிரித்துவிடுவேன் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் நான் காதலுக்கு எதிரி அல்ல. இதுவரை 12 பேருக்கு காதல் திருமணத்தை நடத்தி வைத்துள்ளேன் என்றார் வனிதா. மேலும், தனது மகன் ஸ்ரீஹரி மற்றும் மகள்கள் ஜோவிதா, ஜெயனிதா ஆகியோர் சினிமாவுக்கு வருவார்கள் என்றும் வனிதா தெரிவித்துள்ளார்.