பல படங்களில் நடித்திருந்தாலும், சர்ச்சையாலும், பிக்பாஸ் சீசன் 3 மூலமாகவும் பிரபலமானவர் நடிகை வனிதா. பீட்டர்பாலை மூன்றாவதாக திருமணம் செய்ததால் எப்போதும் லைம் லைட்டில் இருக்கிறார்.  அவ்வப்போது அதிரடி கருத்துக்களையும் பகிர்ந்து பகீர் கிளப்பி வருகிறார் வனிதா பீட்டர்பால். 

சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து தகவல்களை பகிர்ந்து கொண்ட அவர், “பிக்பாஸ் வீட்டில் எப்போதும் ஆடைகளுக்கு கட்டுப்பாடுகள் இருக்காது. யார் எப்படி வேண்டுமானாலும் ட்ரெஸ் பண்ணலாம். ஒருமுறை நடிகை கஸ்தூரி சுற்றி சுற்றி கேமாரா இருப்பதையும் தெரிந்து பெட்ரூமில் டீசர்டை கழற்றி வேறு டீசர்ட்டை மாற்றி உடுத்திக் கொண்டார்.

 

அதை பார்த்ததும் வெளியே வந்துவிட்டேன். அந்த நேரம் வேறு ஒரு வேலைக்காக முகன் மற்றும் தர்ஷன் ஆகியோர் அந்த அறைக்குள் செல்ல முயன்றபோது நான் அவர்களிடம் வேறு விஷயங்கள் பேசி 10 நிமிடங்கள் தடுத்து நிறுத்தினேன்”என தெரிவித்துள்ளார். ஏற்கனவே வனிதாவிற்கும், கஸ்தூரிக்கும் நிறைய கருத்து மோதல்கள் இருக்கும் நிலையில் வனிதாவின் இந்த பேட்டி எந்த அளவிற்கு எதிர்வினை ஏற்ப்படுத்தும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.