மைக்கை கழட்டி எறிந்த வனிதா..! வெளியேறுவது இவரா? அவரா..? 

மிகவும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 3 தற்போது மீண்டும் சூடுபிடித்து உள்ளது என்றே சொல்லலாம். பிக்பாஸ் வீட்டிற்குள் வனிதா விஜயகுமார் இருக்கும்வரை சண்டைக்கு குறையே இருக்காது. அந்த அளவிற்கு மக்கள் மனதிலும் சண்டைக்காரி என்ற அளவிற்கு பெயர் எடுத்துள்ளார் வனிதா விஜயகுமார்.

இந்தநிலையில் நேற்று வெளியான நிகழ்ச்சியில், பிக்பாஸ் ஒரு டாஸ்க் கொடுக்கின்றார் அதில் மூன்று பேர் விளையாட வேண்டும். அந்தவகையில் சாக்ஷி வனிதா மோகன் வைத்தியா...  இவர்கள் 3 பேரும் விளையாட தொடங்குகின்றனர். முதலில் மோகன் வைத்தியா விளையாட்டு பொருளான.. தட்டை வடிவிலான ஒன்றை கையில் வைத்துள்ளார். அதனை மற்ற இருவரும் ஓட யார் மீதாவது போட்டு அவர்கள் மீது ஒட்ட வேண்டும்.அதற்கு ஏற்ற ஆடையை தான் வனிதா மற்றும் சாக்ஷி அணிந்து இருந்தனர். ஆனால் மோகன் வைத்தியா மிகவும் சிரமப்பட்டு நீச்சல் குளத்தில் எல்லாம் இறங்கி விளையாடினார்.

இருந்த போதிலும் அவரால் வனிதா மீது போட இயலவில்லை. பின்னர் வனிதா அதே பொருளைக் கொண்டு சாக்ஷியை துரத்தி அவர்மீது தூக்கி எறிகிறார். இருந்தபோதிலும் சாக்ஷி ஆடையிலும் அது ஒட்டவில்லை. ஒரு கட்டத்தில் மிகவும் கோபமான வனிதா இது சரியான விளையாட்டு அல்ல... என மிகவும் கோபப்படுகிறார். இப்படி எல்லாம் விளையாட முடியாது. இவ்வளவு பெரிய இடத்தில் எப்படி ஓடி சென்று விளையாட முடியும்?  ரூல்ஸ் மாற்ற வேண்டும் என தெரிவிக்கின்றார்.

அப்போது தர்ஷன் குறுக்கிட்டு,  இந்த விஷயத்தை நீங்கள் மோகன் வைத்யா விளையாடும்போது தெரிவித்து இருந்தால் பரவாயில்லை... தங்களால் முடியவில்லை என்ற உடன் இப்போது தெரிவிக்கிறீர்கள். எனவே ஏற்றுக்கொள்ள முடியாது என வாதிடுகிறார். இருவருக்குள்ளும் சண்டை அதிகரிக்கின்றது. இந்த நிலையில், மிகவும் கோபமான வனிதா தான் போட்டிருந்த மைக்கை கழட்டி தூக்கி எறிகிறார். நான் தொடவே மாட்டேன்.. பிக் பாஸ் என்னை அழைத்து பேச வேண்டும்.. என கோபமாக கத்திக்கொண்டே, அவர் இஷ்டத்துக்கு பேசுகிறார். இப்படிப்பட்ட காட்சி நேற்று வெளியாகி இருந்தது. பின்னர் சில நேரம் கழித்து தர்ஷன் உடன் வனிதா பேசுகிறார்.

பின்னர் இருவரும் சமாதனம் ஆயினர். இதுதான் நேற்றைய நிகழ்ச்சியில் நடைபெற்ற ஒரு முக்கிய விஷயமாக பார்க்கப்பட்டது. ஆக மொத்தத்தில் வனிதா இருக்கும் வரை பிக்பாஸ் வீட்டில் சண்டைக்கு பஞ்சமே இருக்காது என்பதில் எந்த மாற்றமும் கிடையாது. ஆனால் நேற்று சாக்ஷி தலைவரானதால், இன்று வனிதா வெளியேறுவாரா அல்லது மோகன் வெளியேறுவாரா என்ற எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.