பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினம் அபிராமி, தலைவியாக பொறுப்பேற்றது முதல், அவருடைய கடமையை நன்றாக செய்து முடிக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார் அபி. ஆனால் படபடப்பு மற்றும் சரியான புரிதல் இல்லாமல் ஒரு சில தவறுகளை செய்து மாட்டி கொள்கிறார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அந்த வகையில், நேற்று அபிராமி மதுமிதாவிடம் சென்று அவருடைய பிரச்சனை என்ன என்பது குறித்து பேசினார். அப்போது மதுவிடம் அபிராமியே பழைய விஷயங்களை பேசி, மீண்டும் பிரச்னையை துவங்கினார். மேலும் பர்சனலாக பேசிய விஷயத்தை அனைவரிடமும், கொஞ்சம் மாற்றி கூறியதால் பிரச்சனை பெரிதாக அனைவருக்கும் மது மீது மீண்டும் கோபம் எழுந்தது.

பின் வனிதா இது குறித்து நேரடியாகவே மதுமிதாவிடம் பேசிய போது, அவர் மேல் தவறு இல்லை என்று உறுதியானது. எனினும் இப்படி மாற்றி பேசி விட்டு, மதுவிடம் அபிராமி பேசுவதால் வனிதா அபிராமி பச்சை துரோகம் செய்து விட்டார் என வாயிக்கு வந்தது எல்லாம் பேசுகிறார். இந்த பிரச்சனை எங்கு சென்று முடியும் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.