'தெய்வமகள்', 'லட்சுமி வந்தாச்சு', போன்ற, டிவி சீரியல்களில் மூலம் பிரபலமானவர் நடிகை வாணி போஜன்.  தற்போது இவர் கதாநாயகியாக மாறியள்ளார். 

நடிகர் வைபவ் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குனர் சார்லஸ் இந்த படத்தை இயக்கி வருகிறார்.  நடிகரும், தயாரிப்பாளருமான நிதின் சத்யா இந்த படத்தை தயாரிக்கிறார்.

பூர்ணா, ஈஸ்வரி ராவ், உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.  தமிழ் மொழி மட்டும் இன்றி,  தெலுங்கிலும் வாணி போஜன் கதாநாயகியாக மாறியுள்ளார். விஜய்தேவரகொண்டா இந்த படத்தை தயாரிக்கிறார். அவருக்கு ஜோடியாக இயக்குனர் தருண் பாஸ்கர் நடித்து வருகிறார். சென்னையை சேர்ந்த குறும்பட இயக்குனர் சமீர் இந்த படத்தை இயக்குகிறார்.

இவ்விரு படங்களும், தற்போது  இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் மற்றொரு படத்தில் கதாநாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளார் வாணி. இந்த படத்தை நிரோஜன் என்பவர் இயக்க உள்ளார்.  இந்த படத்தில் ஓவியா நடித்த 90ml படத்தில் முக்கிய கதாபாத்திரம் நடித்த பொம்மு லட்சுமி மற்றொரு கதாநாயகியாக நடிக்கிறார்.  இப்படத்தை அருண்பாண்டியனின் ஏ-பி குரூப்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விரைவில்  இப்படம் குறித்த அடுத்த தகவல்கள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நடிகை வாணி போஜன் நடித்து இதுவரை எந்த ஒரு படமும் வெளியாகாத நிலையில், இவர் அடுக்கடுக்காக படங்களில் நடிக்க கமிட் ஆகி வருவது, வளர்ந்து வரும் நடிகைகளை வாயடைக்க செய்துள்ளது.