நாடு முழுவதும் கொரானா வைரஸை கட்டு படுத்த பல்வேறு முயற்சிகள் எடுத்து வரும் நிலையில், இதன் தாக்கல் ஏக்க சக்கமாய் எகிறி வருகிறது. குறிப்பாக இன்று ஒரே நாளில் தமிழகத்தில், 4000 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 2000 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி, மக்களை அச்சுறுத்தி வருகிறது.

கொரோனா அதிகம் பரவி வந்தாலும், தமிழகத்தில் உயிர் சேதம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் தினமும் கொரோனா தொற்றில் இருந்து பலர் முழுமையாக குணமாகி வீடு திரும்பி வருகிறார்கள்.

இந்நிலையில் நேற்றைய தினம், 'வாணி ராணி' சீரியலில் பூஜா என்கிற கதாப்பாத்திரத்தில் நடித்து, பிரபலமான நடிகை நவ்யா சுவாமிக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பது. இதனால் சின்னத்திரை நடிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தான், சீரியல் நடிகர்களின் வாழ்வாதம் மற்றும் திரையுலகை நம்பி இருக்கும் தொழிலாளர்கள் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு, சீரியல் பணிகள், உரிய பாதுகாப்புடன் மொத்தம் 60 பேருடன் இயங்க அரசு தரப்பில் அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில் தெலுங்கு தொலைக்காட்சி படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வந்த நடிகை நவ்யா சுவாமிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர் தமிழில் நடிகை ராதிகா நடிப்பில் ஒளிபரப்பான வாணி ராணி, ரன்  உள்ளிட்ட தொடர்களில் நடித்திருந்தார். 

தமிழை தவிர, அமே  கதா, நா பேரு மீனாட்சி உள்ளிட்ட தெலுங்கு சீரியல்களிலும் நடித்து வந்தார்.
இந்நிலையில் படப்பிடிப்பில் இவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில் இவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு நவ்யா தனிமை படுத்தப்பட்டார்.

இந்நிலையில் இவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், தற்போது தான் தனிமையில் இருப்பதாகவும், சாத்தனான உணவுகளை எடுத்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் முடிந்த வரை அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். கொரோனா வந்தாலும் பயம் வேண்டாம், முறையான சிகிச்சை எடுத்து கொண்டாலே போதும் என தெரிவித்து, தன்னுடன் பழகிய அனைவரும் கண்டிப்பாக கொரோனா டெஸ்ட் எடுத்து கொள்ளுங்கள் என அறிவுறுத்தியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.