Vani Bhojan : மகான் படம் வெளியாகி 100 நாட்கள் ஆனதை கொண்டாடும் விதமாக அப்படத்தில் இருந்து டெலிடெட் சீன்களை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் நடிகை வாணி போஜன் நடித்த காட்சிகளையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான திரைப்படம் மகான். விக்ரம் நாயகனாக நடித்திருந்த இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார். விக்ரமின் மகன் துருவ் விக்ரமும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நேரடியாக ஓடிடி-யில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
மகான் படத்தில் நடிகை வாணி போஜனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இருப்பினும் அவர் நடித்த காட்சிகள் அனைத்தும் படத்தில் இருந்து நீக்கப்பட்டன. இதுகுறித்து விளக்கமளித்த கார்த்திக் சுப்புராஜ், வாணி போஜன் சம்பந்தப்பட்ட காட்சிகள் பாதி மட்டுமே படமாக்கப்பட்டதாகவும், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மீதிக் காட்சிகளை படமாக்க முடியாமல் போனதால் அவரது கதாபாத்திரத்தையே படத்தில் இருந்து தூக்கிவிட்டதாக கூறி இருந்தார்.

இந்நிலையில், மகான் படம் வெளியாகி 100 நாட்கள் ஆனதை கொண்டாடும் விதமாக அப்படத்தில் இருந்து டெலிடெட் சீன்களை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் நடிகை வாணி போஜன் நடித்த காட்சிகளையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தில் அவர் மங்கை என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
மகான் படத்தில் சிம்ரன் பிரிந்து சென்ற பின்னர் தனிமையில் வாடும் விக்ரமுக்கு கம்பெனி கொடுக்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் வாணி போஜன். இருவரும் படுக்கையறையில் ரொமான்ஸ் செய்யும் காட்சிகள் அடங்கிய 7 நிமிட வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் வாணி போஜன் கதாபாத்திரம் சூப்பராக இருப்பதாகவும், இதை ஏன் எடுத்தீர்கள் எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... தோற்றத்தில் மாற்றம்... பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டாரா கீர்த்தி சுரேஷ்?... போட்டோவால் ரசிகர்கள் குழப்பம்

