Valimai Trailer : இந்தி, தெலுங்கு, கன்னடா மொழிகளில் வலிமை ட்ரைலர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாக உள்ளதாக இயக்குனர் வினோத் அறிவித்துள்ளார்..

போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் அஜித் (Ajith) நடித்துள்ள படம் வலிமை. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. பின்னணி இசை உள்ளிட்ட வேலைகளில் படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. வலிமை படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. வெளியீட்டுக்கு ஒரு மாதமே எஞ்சி உள்ளதால், படத்தின் அப்டேட்டுக்களும் அடுத்தடுத்து வெளியான வண்ணம் உள்ளன. ஏற்கனவே இப்படத்தின் டீசர், பாடல்கள், மேக்கிங் வீடியோ மற்றும் தீம் மியூசிக் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரைலர் தற்போது ரிலீஸ் ஆகியுள்ளது. இதில் பைக்கர்ஸை பட்டை உரிக்கும் காவலராக வந்து மாஸ் காட்டுகிறார் அஜித்குமார். நேர்கொண்ட பார்வையில் அஜித்தின் மாஸ் போதவில்லை என நினைத்தவர்களுக்கு சரியான விருந்தாக இந்த படம் அமையும் என்பதை வலிமை ட்ரைலர் வெளிப்படுத்தியுள்ளது. இதில் அர்ஜுனன் என்னும் பெயருடன் வரும் அஜிதின் கொலை மாஸ் சண்டை அக்கட்சிகளும் வெறித்தனமான டைலாக்குகளும் அனல் பறக்கின்றன.

YouTube video player

இந்த ட்ரைலர் மூலம் படத்தை கணித்துள்ள நெட்டிசன்கள் அஜித்தின் முந்தைய படமான விவேகத்தில் காவல்துறை அதிகாரியாய் அஜித்தை நினைவு கூர்ந்துள்ளனர். அதிரடி காட்சிகள், மாஸ் பின்னணி இசை என தெறிக்கவிட்டது இந்த வலிமை ட்ரைலர். அதோடு வெளிநாட்டு செய்தி நிறுவனங்களும், வலிமை படத்தின் டிரெய்லர் குறித்து பாசிட்டிவ்வான விமர்சனங்களை கொடுத்து வருவதால், படக்குழு மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளதாம். இந்நிலையில் இந்தி, தெலுங்கு, கன்னடா மொழிகளில் வலிமை ட்ரைலர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாக உள்ளதாக இயக்குனர் வினோத் அறிவித்துள்ளார்..

Scroll to load tweet…