எச்.வினோத் இயக்கத்தில் அஜித் (Ajith) நடித்துள்ள வலிமை (Valimai) படத்தின் டிரெய்லர் அப்டேட்டை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. 

போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் அஜித் (Ajith) நடித்துள்ள படம் வலிமை. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பின்னணி இசை உள்ளிட்ட வேலைகளில் படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. வலிமை படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

வெளியீட்டுக்கு ஒரு மாதமே எஞ்சி உள்ளதால், படத்தின் அப்டேட்டுகளும் அடுத்தடுத்து வெளியான வண்ணம் உள்ளன. ஏற்கனவே இப்படத்தின் டீசர், பாடல்கள், மேக்கிங் வீடியோ மற்றும் தீம் மியூசிக் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், வலிமை படத்தின் டிரெய்லர் அப்டேட்டை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி வலிமை படத்தின் டிரெய்லர் இன்று மாலை 6:30 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் ஸ்டண்ட் காட்சிகள் அதிகளவில் இடம்பெறும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.