வலிமை (valimai) படத்தின் மேக்கிங் வீடியோவில், அஜித் (Ajith) படப்பிடிப்பின் போது பைக் சேஸிங் செய்து விபத்தில் சிக்கிய காட்சியும் இடம்பெற்று இருந்தது. 

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்கு பின் அஜித் - எச்.வினோத் இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் வலிமை. போனி கபூர் தயாரித்துள்ள இப்படம் அதிரடி ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட படமாக தயாராகி உள்ளது. இப்படத்தில் நடிகர் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தாயாராகி வருகிறது. அடுத்தாண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையையொட்டி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு மாதமே எஞ்சியுள்ளதால், படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன.

அந்த வகையில் நேற்று மாலை வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டது. அதில் அஜித் படப்பிடிப்பின் போது பைக் சேஸிங் செய்து விபத்தில் சிக்கிய காட்சியும் இடம்பெற்று இருந்தது. அந்த காட்சி பார்ப்பவர்களுக்கு பதைபதைப்பை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. இருந்தபோதும் வலியை பொருட்படுத்தால், மன வலிமையுடன் எழுந்து அந்த காட்சியை நடித்து அசத்தியுள்ளார் அஜித். 

வலிமை படத்திற்கு திலீப் சுப்புராயண் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி உள்ளார். அவர் இந்த படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள் குறித்து சமீபத்திய பேட்டியில் கூறியதாவது: பைக் சேஸிங் காட்சிகளில் டூப் போட்டு எடுக்காலாம் என நான் சொன்னேன். ஆனா அவர் அதற்கு ஒத்துக்கவே இல்ல. டூப் போட்டு ரசிகர்கள ஏமாத்த விரும்பலனு சொல்லீட்டாரு. வலிமை படத்துல ஹாலிவுட் ரேஞ்சுக்கு சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு உள்ளது. அதை திரையில் பார்க்கும் போது ரசிகர்கள் உணர்வார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.