Asianet News TamilAsianet News Tamil

தீபாவளிக்கு ரிலீசாகிறதா வலிமை..? தீயாய் சமூக வலைத்தளத்தில் பரவும் தகவல்..!

தல அஜித் நடித்துள்ள 'வலிமை' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு கொரோனா சமயம் ஏற்பதால் தள்ளி போனதை தொடர்ந்து, அடுத்ததாக வலிமை ரிலீஸ் குறித்த தகவல் ஒன்று சமூக வலைத்தளத்தில் சுற்றி வருகிறது. ஆனால் இது குறித்த எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
 

valimai movie released in depawali?
Author
Chennai, First Published May 29, 2021, 1:54 PM IST

தல அஜித் நடித்துள்ள 'வலிமை' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு கொரோனா சமயம் ஏற்பதால் தள்ளி போனதை தொடர்ந்து, அடுத்ததாக வலிமை ரிலீஸ் குறித்த தகவல் ஒன்று சமூக வலைத்தளத்தில் சுற்றி வருகிறது. ஆனால் இது குறித்த எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் வெற்றியை அடுத்து தல அஜித், ஹெச்.வினோத், போனிகபூர் மீண்டும் கூட்டணியில் இணைந்துள்ள திரைப்படம் 'வலிமை'. அஜித்தின் 60வது படமாக தயாராகி வரும் இதில், அஜித் ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக 'காலா' பட நடிகை ஹீமோ குரோஷி நடித்துள்ளார். இந்நிலையில் அஜித் ரசிகர்களின் பல நாள் ஆசையை நிறைவேற்றும் விதமாக 'வலிமை' ஃபர்ஸ்ட் லுக் குறித்து தகவலை போனி கபூர் சமீபத்தில் வெளியிட்டார்.

valimai movie released in depawali?

அஜித்தின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு மே 1-ம் தேதி ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் புரமோஷன் பணிகள் தொடங்க இருப்பதாக அந்தப் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மே மாதம் முழுவதும் ‘வலிமை’ குறித்து அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

இந்நிலையில், அஜித் ரசிகர்களை அப்செட் ஆக்கும் விதமாக, தன்னுடைய சமூக வலைத்தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் கூறியிருப்பதாவது... "எங்கள் நிறுவனத்தின் சார்பில் நாங்கள் கொடுத்த முந்தைய அறிக்கையில் வருகின்ற மே 1ம் தேதி அஜித் குமார் அவர்களின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நடிப்பில், வினோத் இயக்கத்தில், எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ‘வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடுவதாக அறிவித்து இருந்தோம்.

valimai movie released in depawali?

இந்த அறிவிப்பு வெளிவரும் வரை கொரோனா இரண்டாவது அலை வரும் என்றும் அதன் தாக்கம் சுனாமி போல் தாக்கும் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை. இந்த தருணத்தில் தேசமெங்கும் எண்ணற்றோர் பொருளாதாரம் இழந்து, உற்றார் உறவினர் உயிரிழந்து, நோய் பற்றிய பீதியிலும் அதிர்ச்சியில் ஆழ்ந்து இருக்கின்றனர். இத்தகைய அசாதாரண சூழ்நிலையில் இப்படத்தில் நடித்துள்ள கலைஞர்கள் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து எடுத்த முடிவின்படி ‘வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றுமொரு தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து அனைவரின் நலனுக்காகவும் பாதுகாப்புக்காகவும் பிரார்த்திப்போம் என்று கூறப்பட்டிருந்தது. 

valimai movie released in depawali?

அஜித்தின் 50 ஆவது பிறந்தநாளை 'வலிமை' படத்தின் பர்ஸ்ட் லூக்குடன் கொண்டாட கார்த்திருந்த ரசிகர்களுக்கு இது, மிகப்பெரிய அதிர்ச்சியாக உள்ளது. எனினும் அவ்வப்போது சில வலிமை படத்தின் அப்டேட் குறித்து தங்கள் வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில், தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் வலிமை படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் இதுவரை இல்லாத அளவிற்கு அஜித் மாஸ் காட்டி இருப்பதாக தெரிவித்திருந்தார்.

valimai movie released in depawali?

இது ஒருபுறம் இருக்க, தற்போது... 'வலிமை' திரைப்படம் பண்டிகை தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளதாகவும், கண்டிப்பாக தீபாவளியில் வெளியாக நிறைய வாய்ப்பு உள்ளது என செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த தகவல் சமூக வலைத்தளத்தில் தீயாக சுற்றி வந்தாலும், இதுகுறித்து எந்த ஒரு அதிகார அறிவிப்பையும் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios