valimai postponed : கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு மற்றும் திரையரங்குகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வலிமை ரிலீஸை ஒத்தி வைப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த தகவல் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அஜித் நடிப்பில் ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி உள்ளது வலிமை. இப்படத்தை சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை போன்ற ஹிட் படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்கி உள்ளார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், 'நேர்கொண்ட பார்வை' படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்த படத்தை தயாரித்து உள்ளார். தமிழிலும் இவர் தயாரிக்கும் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், அடுத்தடுத்து சில தமிழ் படங்களையும் போனி கபூர் தற்போது தயாரித்து வருகிறார்.
கடந்த 2019-ம் ஆண்டே தொடங்கப்பட்ட இப்படம் இரண்டு ஆண்டுகள் கடின உழைப்புக்கு பின் தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இப்படம் வருகிற 2022-ம் ஆண்டு பொங்கல் விருந்தாக திரைக்கு வருகிறது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அஜித்தின் தாயாக ஜெயசுதா நடித்துள்ளார்.
நீரவ் ஷா ஒளிப்பதிவாளராகவும், திலீப் சுப்பராயன் ஸ்டண்ட் மாஸ்டராகவும் பணியாற்றி உள்ளனர். அஜித் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக அர்ஜுனன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான வலிமை படத்தின் ட்ரைலர் ஹாலிவுட் தரத்தில் இருந்ததால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அஜித் ரசிகர்களுக்கு எக்கச்சக்கமாக எகிறியுள்ளது.

இந்த படத்தை வரவேற்க வெறித்தனமாக தயாராகியுள்ளனர் அஜித் ரசிகர்கள். அந்த வகையில் ஏற்கனவே குட்டி குட்டி பேனர், போஸ்டர் போன்றவற்றை ஒட்ட துவங்கிவிட்டனர். அந்த வகையில் தற்போது... புதுவையை சேர்ந்த ரசிகர்கள் சுமார் 120 அடிக்கு பேனர் வைத்து அதகளம் செய்துள்ளனர். இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதற்கிடையே மீண்டும் வேகமெடுக்க கொரோனா பரவல் காரணமாக ஆர் ஆர் ஆர் உள்ளிட்ட பெரிய பட்ஜெட் படங்களின் பொங்கல் வரவு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் வலிமை படம் ஜனவரி 13-ம் தேதி ரிலீஸ் ஆகும் என்பதை மீண்டும் கன்பார்ம் செய்தார் தயாரிப்பாளர் போனி கபூர்.
இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு மற்றும் திரையரங்குகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வலிமை ரிலீஸை ஒத்தி வைப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த தகவல் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

