'தல' அஜித்துக்கு ஒருவரை பிடித்து விட்டால் அவருக்கு தொடர்ந்து தன்னுடைய படங்களை இயக்கும் வாய்ப்பையும், தன்னுடைய படத்தை தயாரிக்கும் வாய்ப்பையும் கொடுப்பார் என்பது அனைவரும் அறிந்தது தான்.

அந்த வகையில் தற்போது அஜித் நடித்து வரும், 'வலிமை' படத்தை ஏற்கனவே அஜித் நடித்து வெளியான 'நேர்கொண்ட பார்வை' படத்தை இயக்கிய, எச்.வினோத் இயக்குகிறார். இந்த படத்தை, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு, வரும் 13 ஆம் தேதி முதல் ராம்மோஜி ராவ் பிலிம் சிட்டியில் ஆரம்பமாக உள்ளது, என நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றனர்.

எனவே இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க உள்ள, கதாநாயகியை தேடுவதிலும் படு தீவிரம் காட்டி வருகின்றனர் பட குழுவினர். நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடிப்பார் என கூறப்பட்ட நிலையில், தற்போது அவர் படு பிஸியாக இருப்பதால் இப்படத்தில் நடிப்பது கஷ்டம் என தெரிகிறது.

இதனால், அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகையை நடிக்க வைக்க தற்போது படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. விரைவில் அந்த நாயகி யார் என்பதையும் படக்குழு அறிவிக்கும் என கோடம்பாக்கத்தில் ஒரு தகவல் கசிந்துள்ளது.