எச்.வினோத் - அஜித் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள வலிமை படத்தின் சர்ப்ரைஸ் அப்டேட் இன்று மாலை வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் வலிமை. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. பின்னணி இசை உள்ளிட்ட வேலைகளில் படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. வலிமை படம் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

வெளியீட்டுக்கு ஒரு மாதமே எஞ்சி உள்ளதால், படத்தின் அப்டேட்டுக்களும் அடுத்தடுத்து வெளியான வண்ணம் உள்ளன. ஏற்கனவே இப்படடத்தின் டீசர், பாடல்கள் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இன்று மாலை வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ இன்று மாலை வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வழக்கம்போல இதையும் சர்ப்ரைஸாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ,மேக்கிங் வீடியோவில் அஜித் நடித்த ஸ்டண்ட் காட்சிகள் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமின்றி, பின்னணியில் யுவனின் மாஸான விசில் தீம் மியூசிக்கும் இடம்பெறும் என கூறப்படுகிறது.

இந்த இரண்டு மாஸ் அப்டேட்டுகளை கேட்டதும் வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனிகபூரை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவரை வாழ்த்தும் விதமாக ஏராளமான மீம்களை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். அந்த மீம்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
