பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில், தற்போது தான் ஒவ்வொரு போட்டியாளர்களின் சுய ரூபமும் வெளியில் வர துவங்கியுள்ளது. இந்த லிஸ்டில் முதலில் இருப்பவர் ஆர்.ஜே.வைஷ்ணவி. 

இவர் ஆளுக்கு தகுந்தாப்போல் பேசியும், ஒருவரை பற்றி மற்றவரிடமும் குறை சொல்லிக்கொண்டே வருகிறார். 

இந்நிலையில் நேற்றைய தினம் நடிகை மும்தாஜ் வைஷ்ணவியிடம் பேசும் போது... 'நீங்கள் என்னுடைய திரைப்பட வாழ்க்கையை பார்த்தீர்கள் என்றால் என்னை பற்றி எந்த ஒரு வதந்தியும் இருக்காது என்று கூறுகிறார். 

இந்த எண்ணம் தன்னுடைய மூளையில் ஒவ்வொரு நொடியும் இருந்ததாகவும், கிளீன் சீட்டாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். 

மேலும் பலர் நினைக்கலாம் திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து விட்டு ஒரு புடவை மாற்ற இவர் இப்படி செய்யலாம் என்று பலர் நினைக்கலாம், அது என் கெரியர் இது நிஜம் என்று தெரிவித்தார். 

இதற்கு வைஷ்ணவி, ஆமாம் 'அங்க சிலர் பேசும் போது கூட சொன்னாங்க மல்லே மல்லே பாட்டுக்கு, ஒண்ணுமே போடமா ஆடிட்டு இப்போது ஒரு புடவை கட்ட சீன் போடுராங்கனு... அதுக்கு நான் அது அவங்களுடைய விருப்பம் என்று கூறியதாக சொல்கிறார்.

பின் மும்தாஜ், தற்போது டிவியில் கூட என்னுடைய பட பாடல்கள் ஒளிபரப்பாகினால் அதனை தான் மாற்றி விடுவதாகவும் தனக்கு வெக்கமாக இருப்பதாகவும், தன்னுடைய வீட்டில் 'என் அண்ணன் பிள்ளைகள் இருவர் இருக்கிறார்கள்' என சொல்லி வேதனை படுகிறார்.

இதனை தெரிந்துக்கொண்ட, யாஷிகா சமையல் செய்யும் இடத்திற்கு வந்து அங்கு இருக்கும் டானி, ஷாரிக், பாலாஜி மற்றும் ஐஸ்வர்யாவிடம் 'வைஷ்ணவி நம்மிடம் ஒரு மாதிரி பேசிவிட்டு, வெளியில் போய் வேறு விதமாக பேசுவதாக கூறி. மும்தாஜ் மல்லே மல்லே பாடலில் எதுவும் போடாமல் ஆடி இருப்பார் என்று அவர் தான் கூறினார்... ஆனால் மும்தாஜிடம் நாம் தான் பேசியதாக கூறியதாகவும், அவர் கூறியதை தான் கேட்டதாகவும் வத்தி வைக்கிறார். 

இந்த பிரச்சனை பற்றி கமல் வைஷ்ணவியிடம் கேட்பாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.