பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் முதல் வாரத்தில், நடிகை ஜனனி ஐயர்' முதல் தலைவியாக தேர்வு செய்யப்பட்டார். இதைதொடர்ந்து இரண்டாவது வாரத்தில், தாடி பாலாஜியின் மனைவி நித்யா எந்த போட்டியும் இன்றி நேரடியாக தலைவி என்கிற பொறுப்பு பெறுவதாக பிக்பாஸ் அறிவித்தார். 

இந்நிலையில் மூன்றாவது வாரத்தின் முதல் நாளான இன்று, மூன்றாவது தலைவர் யார் என தேர்வு செய்யப்படும் என்பது அனைவரும் அறிந்ததுதான். 

இந்த வார தலைவரை தேர்வு செய்வதற்காக பிக்பாஸ் அனைவருக்கும் ஒரு போட்டி வைக்கிறார். அதில் போட்டியாளர்களில் எந்த இரண்டு நபர் முதலில் பிக்பாஸ் அறையில் உள்ள சோபாவில் அமர்கிறார்களோ அவர்கள் தான் தலைவர் போட்டியில் கலந்துக்கொள்ள படுவார்கள் என பிக்பாஸ் குரல் அறிவிக்கிறது.

 

இதில் முதல் ஆளாக சென்று சென்ராயன் அமர்கிறார். அவரை தொடர்ந்து வைஷ்ணவி அமர்கிறார். இவர்கள் இருவருக்கும், யார் மற்ற போட்டியாளர்களிடம் அதிக hug (கட்டிபிடிப்பது) வாங்குகிறார்களோ அவர்கள் தான் இந்த போட்டியின் வெற்றியாளர் என கூறப்படுகிறது.

ஆனால் இது தான் போட்டி என வெளிப்படுத்திக் கொள்ளாமல் இவர்கள் இருவரும் மற்ற போட்டியாளர்களை கட்டிபிடிக்க வைக்க வேண்டும் என பிக் பாஸ் நிபந்தனை வைத்துள்ளது போல் தெரிகிறது. அதனால் சென்ராயனை தோக்கடிக்க வைஷ்ணவி அழுவது போல் சீன் போடுகிறார். சென்ராயன் என்ன சொல்லி மற்ற போட்டியாளர்களிடம் hug வாங்குவது என புலம்பிக்கொண்டே சுற்றி வருகிறார். யார் அதிக hug வாங்கி பிக்பாஸ் மூன்றாவது தலைவராக வருவார் என பொறுத்திருந்து பார்ப்போம்.