அதி தீவிர புயலாக மாறி வரும் நிவர் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை நேரம் வரை கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும்போது 145 கி. மீ. வேகத்தில் காற்றும் வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று முதலே கனமழை கொட்டித்தீர்க்கிறது. இரு தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சென்னை முழுவதும் வெள்ளக்காடாய் மாறியுள்ளது.

 

இந்நிலையில் கவிப்பேரரசு வைரமுத்து நிவர் புயலால் ஏழை மக்கள் அனுபவிக்கும் துன்பத்தை வைத்து கவிதை ஒன்றை எழுதியுள்ளார். 

போ புயலே
போய்விடு

பச்சைமரம் பெயர்த்துப்
பல் துலக்காமல்

வேய்ந்தவை பிரித்து
விசிறிக் கொள்ளாமல்

குழந்தையர் கவர்ந்து
கோலியாடாமல்

பாமர உடல்களைப்
பட்டம் விடாமல்

சுகமாய்க் கடந்துவிடு
சுவாசமாகி விடு

ஏழையரின்
பெருமூச்சை விடவா நீ
பெருவீச்சு வீசுவாய்? - வைரமுத்து என பதிவிட்டுள்ளார்.