வைரமுத்து மீது வஞ்சம் கொண்டு சமூகவலைதளங்களில் வறுத்தெடுத்துப் வரும் பாடகி சின்மயி அவர் மீது தீராத ஆத்திரத்தால் மத்திய அமைச்சரிடம் புகாரளித்துள்ளார்.

 

கடந்த சில மாதங்களுக்கு முன், பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது மீடூ என்ற ஹேஷ் டேக் மூலம் பாலியல் புகார் தெரிவித்தது சமூக வலைதளத்தில் பற்றி எரிந்தது. இதனைத் தொடர்ந்து சின்மயிக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கருத்துகள் பகிரப்பட்டு வந்தன. ஆனாலும் சின்மயி இந்த விவகாரத்தை அவ்வளவு எளிதாக விட்டு விடுதவாக இல்லை. ஆத்திரம் வரும் போதெல்லாம் வைரமுத்து பற்றி சமூக வலைதளங்களில் பதிவிட்டு சிண்டு முடிந்து விடுகிறார் சின்மயி.

இந்நிலையில், சின்மயி அவரது டுவிட்டர் பக்கத்தில், வைரமுத்து மீது மத்திய அமைச்சர் மேனகா காந்திக்கு புகார் அனுப்பி உள்ளார்.  தேசிய பெண்கள் சபையில் புகார் கூற இருக்கிறேன். இதுவே சரியான வழியாக இருக்கும். நான் குற்றச்சாட்டுகள் கூறிய பிறகு டப்பிங் யூனியனில் இருந்து நீக்கப்பட்டேன். டப்பிங் யூனியன் தடை விதித்து இருப்பதால் சினிமா துறையில் பணியாற்ற முடியவில்லை. எனவே இதற்கு தீர்வு காண வேண்டும்” என்று கூறியுள்ளார். இந்த பிரச்சினையை தேசிய மகளிர் ஆணையத்துக்கு எடுத்து சென்று நடவடிக்கை எடுப்பதாக மேனகா காந்தி உறுதி அளித்துள்ளதாக சின்மயி கூறி இருக்கிறார். 

 

2 ஆண்டுகளுக்கு உறுப்பினர் கட்டணம் செலுத்தாததால் அவர் நீக்கப்பட்டதாக கூறப்பட்டது. முன்னணி நடிகைகள் பலருக்கு குரல் கொடுத்து வந்த சின்மயி, 96 படத்தில் திரிஷாவுக்கு குரல் கொடுத்தார். டப்பிங் யூனியனில் இருந்து நீக்கிய பிறகு நடிகைகளுக்கு குரல் கொடுக்க யாரும் அவரை அழைக்கவில்லை.