நேற்று முன்தினம் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் பலரையும் அதிரதிர்ச்சிக்குள் ஆக்கியது, பல லட்ச தொண்டர்கள் படைசூழ நேற்று அவரை கண்ணீர் மல்க அடக்கம் செய்தனர் தொண்டர்கள்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்நிலையில் பிரபல பத்திரிகையாளரும், எழுத்தாளருமான சோ அவர்கள் இன்று அதிகாலை காலமான சம்பவம் மேலும் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது .

இப்போது பிரபல பாடலாசிரியர் மற்றும் கவிஞர் வைரமுத்து உடல்நல குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வந்துள்ளது.

 தற்போது வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், மாத மாதம் மேற்கொள்ள படம் உடல்நிலை பரிசோதனைக்காக தான் மருத்துவமனை வந்துள்ளோம் என்றார் கூறியுள்ளார்.

மேலும் தற்போது வைரமுத்து நல்ல உடல்நிலையோடு இருப்பதாக தெரிவித்துள்ளார் அவருடைய மகன் மதன் கார்க்கி.