’வெல்கம் பேக் காந்தி’ படத்துக்காக வைக்கம் விஜயலட்சுமி பாடிய பாடல் வீடியோ...

மகாத்மா காந்திக்கு மிகவும் பிடித்தமான பாடல் இது. இந்தப் பாடலுக்கு ஏற்கனெவே ஏ ஆர்  ரஹ்மான், விஷால் சேகர் போன்ற புகழ்பெற்ற இசைஅமைப்பாளர்கள் இசை அமைத்துள்ளனர். கிஷோர் குமார் அமிதாப் பச்சன் போன்றவர்களால் அவ்வப்போது சில தேசபக்தி படங்களுக்காகப் இப்பாடல் பாடப்பட்டுள்ளது.மகாத்மா காந்தி நவகாளியில் யாத்திரை மேற்கொண்டிருந்தபோது  அவர் சென்ற இடமெல்லாம் மக்கள் இந்தப் பாடலைப் பாடி அவரை வரவேற்றனர்.

vaikom vijayalakshmi sings for welcome back gandhi movie

‘வெல்கம் பேக் காந்தி’படத்திற்காக  வைக்கம் விஜயலட்சுமி பாடிய படலை வெளியிட்ட  மகாத்மா காந்தியின் தனிச்  செயலர்  வி. கல்யாணம்,’காந்தியைப்பற்றி இன்றைய இளம் தலைமுறையினருக்கு அவ்வளவாகத் தெரியவில்லை. எனவே இப்படத்தை இந்தியாவிலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் இலவசமாகத் திரையிடவேண்டும்’என்றார்.vaikom vijayalakshmi sings for welcome back gandhi movie

‘ஏக்லா சலோ ரே. என்பது ரவீந்திரநாத் தாகூரின் புகழ்பெற்ற வங்கமொழி பாடல். “உன்னை யாரும் பொருட்படுத்தாவிடினும் உனது பாதையில்  தன்னந்ததனியாக  நீ நடந்து செல்...”என்பது இதன் முதல் வரி. மகாத்மா காந்திக்கு மிகவும் பிடித்தமான பாடல் இது. இந்தப் பாடலுக்கு ஏற்கனெவே ஏ ஆர்  ரஹ்மான், விஷால் சேகர் போன்ற புகழ்பெற்ற இசைஅமைப்பாளர்கள் இசை அமைத்துள்ளனர். கிஷோர் குமார் அமிதாப் பச்சன் போன்றவர்களால் அவ்வப்போது சில தேசபக்தி படங்களுக்காகப் இப்பாடல் பாடப்பட்டுள்ளது.மகாத்மா காந்தி நவகாளியில் யாத்திரை மேற்கொண்டிருந்தபோது  அவர் சென்ற இடமெல்லாம் மக்கள் இந்தப் பாடலைப் பாடி அவரை வரவேற்றனர்.

இப்பாடலின் ஆடியோ பதிவினை மகாத்மா காந்தியிடம் தனிச்செயலராக பணிபுரிந்த  98 வயதான  திரு. வி. கல்யாணம் அவர்கள் அண்மையில் வெளியிட்டு வாழ்த்திப் பேசினார்.இப்போது இந்தப்பாடலை . ‘வெல்கம் பேக் காந்தி’ (இந்தி மற்றும் ஆங்கிலம்) படத்திற்காக புகழ்பெற்ற பாடகி வைக்கம் விஜயலட்சுமி அவர்கள் பாடியுள்ளார். படத்தினை காமராஜ் திரைப்படத்தை தயாரித்த ரமணா கம்யுனிகேஷன்ஸ்  நிறுவத்தினர் தயாரித்துள்ளனர். காந்தி அடிகளின் 150 வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டுவரும் இந்த தருணத்தில் இப்பாடலை  தங்கள் படத்தின் மூலம் மீண்டும் ஒலிக்க  வைத்திருப்பதன் மூலம் தேசத்தந்தைக்கு  ஒரு புகழ் அஞ்சலியைச் செலுத்தியுள்ளோம் என்கின்றனர் படத்தை  தயாரித்துள்ள  ரமணா கம்யுனிகேஷன்ஸ்  நிறுவத்தினர்.  இப்பாடலுக்கான காட்சிகள் இந்தியாவெங்கும் பல இடங்களில் ஏற்கனெவே படமாக்கப் பட்டுள்ளது. படப்பிடிப்பு நிறைவு பெற்று படம் வெளியாகும் தருணத்தில் உள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios