காமெடி என்றாலே, கோலிவுட் திரையுலகில் பலருக்கும் கண் முன் வந்து செல்லும் காமெடி நடிகர்களில் ஒருவர் வைகை புயல் வடிவேலு. இவர் இல்லாத மீம்ஸுகளே இல்லை என சொல்லும் அளவிற்கு மீம்ஸ் கிரியேட்டர்கள் இவரை கொண்டாடி வருகிறார்கள். அதே போல் இளைஞர்கள், சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவருடைய மனதிலும் தன்னுடைய காமெடி மூலம் ஆழமாக பதிந்து விட்டார். இவர் திரைப்படங்களில் இருந்து சில வருடங்கள் ஒதுங்கி இருந்தாலும் இவருடைய காமெடியை ஒவ்வொரு நாளும், போன், தொலைக்காட்சி போன்றவற்றில் தினமும் பல ரசிகர்கள் பார்த்து சிரித்து வருகிறார்கள்.

காமெடி ரோல் மட்டும் அல்ல, கதாநாயகனாகவும் நடித்து வெற்றி கண்டார் வடிவேலு.  இவர் இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில், 2006 ஆம் ஆண்டு நடித்த இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன் பின்னர் வடிவேலு ஹீரோவாக நடித்த படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய்யின் மெர்சல் படத்தில் தான் வடிவேலுவை பார்க்க முடிந்தது. வடிவேலுக்கு சூப்பரான காமெடி டிராக்கை அமைத்துக்கொடுத்த இயக்குநர்களில் முக்கியமானவர் இயக்குநர் சுராஜ். இவர் இயக்கத்தில் வடிவேலு நடித்த மருதமலை, தலைநகரம், கத்தி சண்டை ஆகிய படங்களில் இடம் பெற்ற காமெடி காட்சிகளை ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். 

 

இதையும் படிங்க: நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையிலான வயது வித்தியாசம் எவ்வளவு தெரியுமா?

இதனிடையே நீண்ட இடைவேளைக்குப் பிறகு வடிவேலுவை வைத்து சுராஜ் வெப் சீரிஸ் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது வடிவேலுவை வைத்து இயக்கவிருந்த படத்தை சுராஜ் வெப் சீரிஸாக மாற்றியுள்ளாராம். மொத்தம் 9 எபிசோடுகளாக ஒளிபரப்பாக உள்ள, இந்த வெப் சீரிஸை எந்த ஓடிடி தளத்தில் வெளியிடுவது என்ற பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.