சென்னை சாலிகிராமத்தில் உள்ள காவிரி பள்ளி வாக்கு மையத்தில் மாலை 4 மணிக்கு மேல் வாக்களிக்க வந்த வடிவேலு தன் ஜனநாயக கடமையை நிறைவு செய்தபின் அந்த இடத்தையே செம கலகலப்பாக்கினார்.

வடிவேலு வாக்களிப்பதற்கு பூத்திற்குள் சென்றார். அவர் வாக்களிக்கும் போது அவரது முகம் தெரியாததால் பத்திரிக்கையாளர்கள் முகத்தை நன்றாக காட்டுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார்.

இதையடுத்து பூத்தின் அட்டையை தாண்டி ஆடியபடியே குதித்து தன் முகத்தை காட்டினார். பின் அங்கிருந்து தன் விரலை உயர்த்தி வாக்களித்துவிட்டேன் என்பதை உணர்த்துவதாக காட்டினார்.

வெளியே வந்த வடிவேலு செயதியாளர்களிடம் பேசினார். அப்போது, இந்த தேர்தல் வந்து திருவிழாக்கு சமம். இதுல வந்து மக்கள் நல்லா..ஒரு தடவைக்கு பத்து தடவ சிந்துச்சு யோசிச்சு ஓட்டு போடனும்னு… ஆனா இது  சொல்ற நேரம் கிடையாது, ஏன்னா நேரம் முடிஞ்சு போச்சு. மக்களுக்கு நாம சொல்ல வேண்டிய அவசியமே கிடையாது. ஜனங்கள் ரொம்ப அழகா தெளிவா இருக்காங்க என்றார்.

இந்த எலக்ஷன் வந்து ரொம்ப வித்தியாசமானது. அனேகமா இந்த எலக்ஷன் முடிஞ்ச உடனே செமையா மழை பெய்யும்னு நினைக்கறேன். ஏன்னா இந்த எலக்ஷனுக்கு அப்பறம் தான் மக்கள் , எல்லோருக்குமே விடிவு காலம் வரும். மக்கள் எல்லோரும் கண்ணீர் சிந்தாம, யாரு வந்தாலும் இந்த மக்கள காப்பாத்தனும், மக்களுக்கு நல்லது செய்யனுங்கறதுதான் என்னோடு பணிவான வேண்டுகோள் என வடிவேலு குறிப்பிட்டார்.