டைமிங் காமெடி மட்டுமல்ல, தனது பாடி லாங்குவேஜிலும் மக்களை சிரிக்க வைப்பதில் ஜித்தன் நம்ம வைகை புயல் வடிவேலு. தற்போது மீம்ஸ் நாயகனாக சோசியல் மீடியாவை ஆட்சி செய்து வரும் வடிவேலு, நீண்ட காலமாக சினிமாவில் நடிக்காமல் இருந்து வருகிறார். சமீபத்தில் விஜய்யின் மெர்சல் படத்தில் கலக்கிய வடிவேலு, சினிமாவில் தோன்றவில்லை என்றாலும் நேசமணிக்கு என்னாச்சு என்ற ஒற்றை ஹேஷ்டேக்கால் உலக ட்ரெண்டிங் ஆனார். 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கமல் ஹாசனின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றார் வடிவேலு. அன்றிலிருந்து மீண்டும் அவரை சினிமாவில் நடிக்க வேண்டுமென் கோரிக்கைகள் குவிந்து வருகின்றன. இதனிடையே சன் டி.வி.யின் விருது வழங்கும் விழாவில் வைகை புயல் வடிவேலு கலந்து கொண்டு குத்தாட்டம் போட்ட வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

 அந்த விழா மேடையில் டான்ஸ் மாஸ்டர் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து வடிவேலு போட்ட ஆட்டம் அரங்கத்தையே அதிர வைத்தது. காதலன் படத்தில் மிகவும் பிரபலமான பேட்டா ராப் பாடலுக்கு இருவரும் ஒன்றாக இணைந்து நடனமாடினர். அதைப் பார்த்த பார்வையாளர்களின் கை தட்டல் அரங்கமே அதிரும் அளவிற்கு கேட்டது. மேலும் புரோமோஷனுக்காக சன் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள அந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது.