காமெடி நடிகர் வைகை புயல் வடிவேலு இல்லாதா மீம்ஸுகளே இல்லை என சொல்லும் அளவிற்கு, இளைஞர்கள், சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவருடைய மனதிலும் ஆழமாக பதிந்து விட்டார் காமெடி கிங்.

இவர் கதாநாயகனாக நடித்த இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படம், மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து, இந்த படத்தின் இரண்டாம் பாகம், இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில், ஷங்கர் தயாரிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு படப்பிடிப்பு துவங்கியது. இந்த படத்தில் ஹீரோவாக நடிகர் வடிவேலு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

படப்பிடிப்பு துவங்கிய சில நாட்கள் மட்டுமே படத்தில் நடித்த வடிவேலு, பின் சரியாக படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை என கூறப்பட்டது. பின் தயாரிப்பாளர் ஷங்கர் இது குறித்து, நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தார். 

இதுகுறித்த பிரச்சனைக்கு நடிகர் வடிவேலு சரிவர ஒத்துழைப்பு தரவில்லை என கூறி, தயாரிப்பாளர் சங்கம், வடிவேலு தமிழ் படங்களில் நடிக்க தடை விதித்தது. எனவே இந்த படத்தை தொடர்ந்து வடிவேலு மற்ற படங்களில் நடிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இந்த பிரச்சனைகள் ஒருபுறம் இருக்க, கடந்த மாதம், வடிவேலு 'பிரண்ட்ஸ்' படத்தில் நடித்த நேசமணி கதாப்பாத்திரம் மிகவும் ட்ரெண்ட் ஆனது.   இது குறித்து பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த வைகைப்புயல் வடிவேலு,  கோலிவுட் திரையுலகில் தன்னை வளரவிடாமல் சிலர் தடுப்பதாகவும், ஆனால் எனக்கு ஹாலிவுட்டிலும் வாய்ப்புகள் வருவதாக கூறியிருந்தார்.  நெட்பிலிக்ஸில் கூட தன்னை அழைப்பதாக கூறினார். 

இந்நிலையில், இவரை பிரபல வெளிநாட்டு நிறுவனம் ஒன்று காமெடி வெப் சீரிஸில் இவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.  மேலும் இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது எப்படியும் சொன்னதை செஞ்சு, வைகைப்புயல் வடிவேலு தன்னுடைய எதிரிகளை வாயடைக்க செய்து விட்டார், என ரசிகர்கள் இந்த தகவலை கொண்டாடி வருகிறார்கள்.