Asianet News TamilAsianet News Tamil

'கோல்டன் விசா' பெற்ற முதல் இந்திய நடிகை.: லெஜெண்ட் சரவணன் ஹீரோயினுக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை..!

சமீபத்தில் மலையாள நடிகர்களான மம்முட்டி (mammootty) மற்றும் மோகன்லால் 9mohanlal)ஆகியோருக்கு யுஏஇ அரசு கோல்டன் விசா வழங்கி கௌதவித்தது. இதைத் தொடர்ந்து பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌடாலா (urvashi rautela) கோல்டன் விசா (Golden Visa) பெற்றுள்ளார்.

 

urvashi rautela is the first Indian actress to receive a Golden Visa from UAE
Author
Chennai, First Published Oct 1, 2021, 5:40 PM IST

சமீபத்தில் மலையாள நடிகர்களான மம்முட்டி மற்றும் மோகன்லால் ஆகியோருக்கு யுஏஇ அரசு கோல்டன் விசா வழங்கி கௌதவித்தது. இதைத் தொடர்ந்து பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌடாலா கோல்டன் விசா பெற்றுள்ளார்.

யுஏஇ வழங்கும் கோல்டன் விசா என்பது அவ்வளவு எளிதில் யாருக்கும் கிடைத்துவிடாது. தங்களுடைய துறையில், சிறந்து விளங்குபவர்களுக்கு மட்டுமே இந்த கௌரவத்தை கொடுத்து வருகிறது ஐக்கிய அரபு அமீரகம். அந்த வகையில் தற்போது, பல்வேறு பாலிவுட் படங்களிலும், சமூக சேவை பணிகளிலும் ஈடுபட்டு வருபவர்கள், மற்றும் அந்நாட்டில் முதலீடு செய்யும் தொழிலதிபர்கள், திரையுலக நட்சத்திரங்கள் போன்றோருக்கு இந்த விசா வழங்கப்பட்டு வருகிறது.

urvashi rautela is the first Indian actress to receive a Golden Visa from UAE

இந்த விசாவுக்கு பல சிறப்புகள் உள்ளன. கோல்டன் விசா வைத்திருப்பவர்கள், எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கவும், எவ்வித தடையும் இன்றி  வேலை செய்யவும் அனுமதிக்கப்படுவார்கள். அவர்களும் ஐக்கிய சிட்டிசன்களுக்கு நிகராகவே கருதப்படுவார்கள். இந்த விசா ஒவ்வொருவருக்கும் 5 அல்லது 10 ஆண்டுகள் புதுப்பிக்கும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே இந்த கோல்டன் விசாவை பிரபல பாலிவுட் நடிகர்களான ஷாருக்கான், சஞ்சய் தத் ஆகியோர் வைத்திருக்கும் நிலையில், அவர்களைத் தொடர்ந்து மோகன்லால் மற்றும் மம்முட்டி ஆகியோர்களுக்கு வழங்கப்பட்டது.

urvashi rautela is the first Indian actress to receive a Golden Visa from UAE

ஆனால் இதுவரை எந்த ஒரு இந்திய நடிகைக்கும் ஐக்கிய அரபு அமீரகம் இந்த கோல்டன் விசா வழங்காத நிலையில் முதல் முறையாக நடிகை, ஊர்வசி ரௌடாலாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கோல்டன் விசா பெரும் முதல் இந்திய நடிகை என்கிற பெருமையும் இவருக்கு கிடைத்துள்ளது. இதுகுறித்து இவர் போட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது, " இந்த விசா 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என்றும், இந்த விசா 12 மணி நேரத்தில் தனக்கு கிடைத்துள்ளதாகவும் ஊர்வசி தெரிவித்துள்ளார். இது தனக்கும் தனது குடும்பத்திற்கும் மிகப்பெரிய மரியாதை என்றும் இதனை அடுத்து ஐக்கிய அமீரக அரசுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்".

urvashi rautela is the first Indian actress to receive a Golden Visa from UAE

தற்போது இவர் தமிழில், லெஜெண்ட் சரவணன் நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடித்து முடித்துள்ளார். இந்த படம் குறித்த தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து பல பாலிவுட் திரைப்படங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் ஊர்வசி கலந்து கொண்டு கலக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios